For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட்: பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு- வேளாண், மருத்துவ நிறுவன பங்குகள் ஏறுமுகம்

பட்ஜெட் அறிவிப்புகளால் வேளாண்துறை பங்குகள், சுகாதாரத்துறை பங்குகள் ஏறுமுகம் கண்டன.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    உலகின் மாபெரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிப்பு - வீடியோ

    மும்பை/டெல்லி: பட்ஜெட்டில் மிக முக்கிய அறிவிப்புகள் பெரிய அளவு இல்லாத நிலையில் பங்குச் சந்தைகள் ஊசலாட்டம் கண்டன. இன்றைய வர்த்தக முடிவிகள் மும்பை பங்கு சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் சரிவை சந்தித்தன.

    பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி விவசாயத்துறைக்கு ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வேளாண்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விறுவிறுவென எகிறின. அதேபோல் உலகிலேயே மிகப் பெரிய சுகாதார திட்டத்தை அருண்ஜேட்லி அறிவித்த போது மருத்துவமனைகள், காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.

    Sensex, Nifty close lower after budget announcement

    இதன்பின்னர் மும்பை பங்கு சந்தையும் தேசிய பங்கு சந்தையான நிஃப்டியும் சரிவை சந்தித்தன. மும்பை பங்கு சந்தை 35,917.07 புள்ளிகளாக சரிந்தது. நிஃப்டியும் 11,010.10 புள்ளிகளாகவும் சரிந்தன.

    பிற்பகலில் ஆபரணத்துறை நிறுவனங்களின் பங்குகளும் சரிவை எதிர்கொண்டது. இதன்பின்னர் பிற்பகல் 1.20 மணிக்கு பங்குச் சந்தைகள் மீண்டும் ஏற்றம் பெற்றன. அப்போது மும்பை பங்குச் சந்தை 36,013.68 புள்ளிகளுடனும் நிஃப்டி 11,038.05 புள்ளிகளுடன் ஏற்றம் கண்டன.

    பகல் 2 மணியளவில் சிகரெட் மீதான எக்சைஸ் வரி அதிகரிக்கப்படாடதால் ஐடிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏறுமுகமாகின. பங்குச் சந்தைகள் வர்த்தக முடிவில் சரிவுடன் முடிவடைந்தன.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 58.36 புள்ளிகள் சரிவுடன் 35,906.66 ஆக இருந்தது. நிஃப்டி 10.80 புள்ளிகள் சரிந்து 11,016.90 ஆக இருந்தது.

    English summary
    BSE Sensex and Nifty closed lower after the Union Budget.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X