• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உல்லாசம் அனுபவித்த கையோடு சயனைடு கொடுத்து 20 பெண்களை கொலை செய்த மோகன்!

By Veera Kumar
|

பெங்களூர்: திருமண ஆசை காட்டி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துவிட்டு 20 பெண்களை சயனைடு கொடுத்து கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த மோகன், ஒரே நாளில் உலக புகழ் பெற்றுவிட காரணம், சோட்டா ராஜனின் கைது. சோட்டா ராஜன் வைத்திருந்த போலி பாஸ்போர்ட்டில் மோகன்-கர்நாடகா என குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கூட, கைதானது இந்தியாவை சேர்ந்த சீரியல்-கில்லர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது.

சோட்டா ராஜன் குழப்பம்

சோட்டா ராஜன் குழப்பம்

இன்டர்போல் சோட்டா ராஜனின் கைது போட்டோவை வெளியிட்ட பிறகுதான் உலக ஊடகங்கள் அமைதியாகின. சிபிஐயும், இந்திய உள்துறையும் உடனடியாக களத்தில் இறங்கி கைதானது சோட்டா ராஜன் என்று கூற வேண்டிய நிலையும் உருவானது. அப்படியானால் மோகன் என்பவர் யார்? சயனைடு மோகன் என பெயர் வர காரணம் என்ன என்பது குறித்து தெரிய வேண்டுமா. மேலும் படியுங்கள்.

பாத்ரூமில் விழுந்த பெண்

பாத்ரூமில் விழுந்த பெண்

இடம்: கர்நாடக மாநிலம் ஹாசன் பஸ் நிலையம். ஆண்டு: 2009.

பஸ் நிலைய பாத்ரூமுக்குள் சென்ற பெண் ஒருவர் மயங்கி பேச்சு, மூச்சு இல்லாமல் விழுந்து கிடக்கிறார். பல பெண்களும் ஓடிச்சென்று தண்ணீர் தெளித்து, பரபரப்போடு அந்த பெண்ணை எழுப்ப பார்க்கிறார்கள். ஆனால் முடியவில்லை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஆண் உருவம், பஸ் நிலையம் அருகேயிருந்த லாட்ஜுக்குள் நுழைகிறது.

நகைகளுடன் மாயம்

நகைகளுடன் மாயம்

லாட்ஜுக்குள் நுழைந்த அந்த ஆண், பாத்ரூமில் மயங்கி சாய்ந்த பெண் தங்கியிருந்த அறைக்குள் இருந்து நகை, பணத்தை எடுத்துக்கொண்டு மாயமாகிவிடுகிறது. இதனிடையே சிறிது நேரத்திலேயே, மயங்கிய பெண் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிவிக்கிறார்கள், கொலை வழக்கு பதியப்படுகிறது. விசாரணையில் இறந்த பெண் பெயர் அனிதா என்று தெரியவருகிறது.

20 பெண்கள் மர்ம சாவு

20 பெண்கள் மர்ம சாவு

போலீஸ் விசாரணையில், அனிதாவுடன் லாட்ஜில் ஒரு ஆண் தங்கியிருந்ததாகவும் அவரது பெயர் ஆனந்த் குலால் என்று பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதுபோல ஒரு சம்பவம் அல்ல. பெங்களூர், மடிகேரி, மங்களூர், பெல்லாரி என பல லாட்ஜுகளின் அருகில் சுமார் 20 பெண்கள், அடுத்தடுத்த மாதங்களில், இதேபோல பாத்ரூமில் மயங்கி விழுந்து இறந்து கிடந்தனர்.

ஒரே முகவரி

ஒரே முகவரி

உயிரிழந்த பெண்கள் அனைவரும் சயனைடு உட்கொண்டிருந்தனர். அனைத்து பெண்களுமே ஒரு ஆணுடன்தான் லாட்ஜில் தங்கியிருந்தனர். அந்த ஆணின் பெயர்கள் வேறு வேறாக பதியப்பட்டிருந்தாலும், விலாசம் ஒன்றாகவே இருந்தது. போலி விலாசமாக இருந்தாலும், ஒரே விலாசம் தரப்பட்டிருப்பதை வைத்து, குற்றங்களில் ஈடுபட்டது ஒரே நபர்தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

சிக்கிய மோகன்

சிக்கிய மோகன்

இந்நிலையில்தான், அனிதாவின் செல்போன் எண்ணில் பேசியவர்களை வைத்து, மங்களூரில் மோகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்தன. அதுகுறித்து போலீசார் கூறியதாவது: டிப்-டாப் ஆசாமியான மோகனின் டார்கெட், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்து பெண்கள்.

காதல் வலை

காதல் வலை

வேலைக்கு செல்லும் பெண்களை பஸ் நிறுத்தங்களில் கண்டு பேசி, நட்பை வளர்ப்பது மோகன் வாடிக்கை. அதன்பிறகு காதலிப்பதாக அடிபோடுவார். 10ல் 2 பெண்களாவது, காதலுக்கு ஓ.கே சொல்லிவிடுவார்கள். சில காலம் கழித்து, வரதட்சணை ஏதும் வேண்டாம், என்னோடு ஓடி வா, திருமணம் செய்யலாம் என்று மோகன் அழைப்பாராம். வரதட்சணை கேட்கவில்லையே என்ற ஆசையில் அந்த பெண்களும் மோகனுடன் வீட்டை விட்டு ஓடுவார்களாம்.

கருத்தடை மாத்திரையாம்

கருத்தடை மாத்திரையாம்

திருமணம் செய்வதாக கூறி, ஏதாவது ஒரு நகரத்தில் லாட்ஜில் அறை எடுத்து தங்கும் மோகன், இரவில், அந்த பெண்ணுடன் உறவு கொள்வாராம். இதன்பிறகு, மறுநாள், லாட்ஜை காலி செய்யும் நேரத்தில், சயனைடு அடைத்த மாத்திரையை அந்த பெண்களிடம் கொடுத்து சாப்பிட சொல்வாராம். மாத்திரை குறித்து, பெண்கள் விசாரித்தால், அது கருத்தடை மாத்திரை என்று கூறுவாராம். இதை நம்பி அந்த பெண்கள் சாப்பிட்டுவிட்டு பஸ் நிலையம் நோக்கி கிளம்புவார்கள். அப்போதுதான் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பார்கள்.

லோன் போட்டு ஓடிய பெண்

லோன் போட்டு ஓடிய பெண்

மோகன், இதுபோல 20 பெண்களை கொலை செய்து, அவர்கள் அணிந்து கொண்டு வந்த தங்க நகைகள், செல்போன்களை திருடி விற்று உல்லாசம் அனுபவித்துள்ளார். சுனந்தா பூஜாரி என்ற ஒரு பெண், மோகனுடன் திருமணம் செய்யப்போகிறோம் என்ற ஆசையில், வங்கியில் ரூ.25 ஆயிரம் லோன் எடுத்துக்கொண்டு வந்துள்ளார். அந்த பெண்ணையும் கொலை செய்து பணத்தை எடுத்துக்கொண்டு மோகன் தப்பிவிட்டார்.

பள்ளி ஆசிரியர்

பள்ளி ஆசிரியர்

காதலிக்கும் பெண்களிடம், போலியான பெயர்களை சொல்லிதான் ஏமாற்றியுள்ளார். குறிப்பாக அந்த பெண்களின் ஜாதி பெயர்களை தனக்கு சூட்டிக்கொள்வாராம். ஆரம்ப பள்ளிக்கூடத்தில் சயின்ஸ் ஆசிரியராக இருந்தவர்தான் இந்த மோகன். 2005ம் ஆண்டு, தனது முதல் காதலியை நேத்ராவதி நதியில் தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை பிறர் காப்பாற்றிவிட்டனர். அந்த வழக்கில் மோகன் கைதானதால் ஆசிரியர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தார்.

நகைக்கு பாலீஸ்

நகைக்கு பாலீஸ்

இந்த வழக்கில் இருந்து மோகன் விடுதலை செய்யப்பட்டார். அதன்பிறகுதான், சயனைடு மூலம் கொலை செய்வதுதான் சேஃப்டி என்ற முடிவுக்கு வந்து அந்த பாதையை மோகன் தேர்ந்தெடுத்தார். பொற்கொல்லர் போல நடித்து, நகைகளுக்கு பாலீஸ் செய்ய சயனைடு வேண்டும் என்று கூறி, சயனைடு வாங்கி சேர்த்து வைத்து, அதை மாத்திரையில் அடைத்து கொலை செய்துள்ளார்.

தூக்கு

தூக்கு

மோகன் மிகுந்த புத்திசாலி. ஆனாலும், எல்லா குற்றவாளிகளையும்போல மோகனும் ஆதாரங்களை தனக்கே தெரியாமல் விட்டுவிட்டார். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். தற்போது மோகன் தூக்கு தண்டனை கைதி என்பது குறிப்பிடத்தக்கது. மங்களூர் துரித நீதிமன்றம் அவருக்கு இத்தண்டனையை வழங்கியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Mohan Kumar, a serial killer who murdered at least 20 women in the last five years after telling them that he wanted to marry them, is being tried in Mangalore. V. Kumara Swamy on the chilling case of ‘Cyanide’ Mohan and his female victims.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more