For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

31 வங்கிகளுக்கு தொடர்பு.. ஆக்சிஸ், ஐசிஐசிஐக்கு சம்மன்.. பூதாகரமாகும் நீரவ் மோடி விவகாரம்

நீரவ் மோடி வாங்கிய லோன் முறைகேட்டில் தற்போது ஐசிஐசி வங்கி, ஆக்சிஸ் வங்கி இரண்டு வங்கி நிர்வாகிகளும் விசாரிக்கப்பட இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: நீரவ் மோடி வாங்கிய லோன் முறைகேட்டில் தற்போது ஐசிஐசி வங்கி, ஆக்சிஸ் வங்கி இரண்டு வங்கி நிர்வாகிகளும் விசாரிக்கப்பட இருக்கிறார்கள்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.

அவர் ஹாங்காங்கில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.

எத்தனை

எத்தனை

இதில் பஞ்சாப் நேஷனல் வங்கிதான் முக்கியமான பின்புலம் என்றாலும் இன்னும் 31 வங்கிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் இந்த வங்கிகள் கிளை மூலமாக லோன் கொடுப்பதற்காக மெயில்கள் சென்று இருக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகள் எல்லாம் இந்த 31க்குள் அடக்கம்.

எவ்வளவு பணம்

எவ்வளவு பணம்

இதில் தற்போது ஐசிஐசி வங்கி, ஆக்சிஸ் வங்கி இரண்டு வங்கிகளும் விசாரிக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் மொத்தமாக 3000 கோடி வரை மோசடிக்கு உதவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஐசிஐசி வங்கி 405 கோடி லோன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சம்மன் அளிக்கப்பட்டது

சம்மன் அளிக்கப்பட்டது

இந்த விவகாரத்தில் தற்போது ஐசிஐசி வங்கியின் நிர்வாக இயக்குனரான சந்தா கோச்சாருக்கும் , ஆக்சிஸ் வங்கியின் தலைவர் ஷிகா சர்மா ஆகியோருக்கு சம்மன் அளிக்கப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கும் இந்த முறைகேட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே இது குறித்து புகார்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இன்னும்

இன்னும்

இவர்கள் இருவரும் 'தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம்' முன்பு ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த மோசடியில் இன்னும் 29 பேருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட இருக்கிறது. முக்கியமான வங்கிகள் இந்த பட்டியலில் கீழ் வர இருக்கிறது.

English summary
CBI received two complaints from Punjab National bank against billionaire jewellery designer Nirav Modi and a jewellery company regarding fraudulent transactions worth over Rs 10,000 crore. However, Investigation agencies are clueless about the whereabouts of Nirav Modi, the prime accused in the case. Nirav Modi has left India. Rs 5,100 crore seized from Nirav Modi assets. No one is co-operating with CBI in Nirav Modi probe
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X