For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தர்காவுக்குப் போன இடத்தில் விபரீதம்.. லாரி கவிழ்ந்து 7 குழந்தைகள் பலி

Google Oneindia Tamil News

ஹூப்ளி: கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே லாரியில் தர்காவுக்குப் போனவர்கள் லாலி கவி்ழ்ந்து விபத்தில் சிக்கினர். இதில் 7 குழந்தைகள் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஹூப்ளி அருகே உள்ளது ஹஸரத் சாத்தோன் ஷாஹீத் தர்கா. பிரபலமா இந்த தர்காவுக்கு அன்செட்டகெரி என்ற இடத்தில் உள்ள அரபி மதரசா பள்ளியைச் சேர்ந்த சிறார்கள் உள்ளிட்டோர் ஒரு லாரியில் சென்றனர்.

தர்காவுக்குப் போய் விட்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஜுஜன்பைலு என்ற இடத்தில் திடீரென லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய லாரியில் கிட்டத்தட்ட 130 பேர் இருந்தனர். அதில் 125 பேர் சிறார்கள்.

லாரி கவிழ்ந்ததும் 7 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்னர். இரண்டு மதரசா ஆசிரியர்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லாரி டிரைவர் காயமின்றி தப்பினார். விபத்தைத் தொடர்ந்து அவர் தப்பி ஓடி விட்டார்.

படு வேகமாக லாரி வந்ததே விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. வேகமாக வந்தபடி, அங்கோலா - கூட்டி தேசிய நெடுஞ்சாலையில் வளைந்துள்ளார் டிரைவர். அதில்தான் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விட்டது.

English summary
Seven students died and over a 100 were injured when the truck in which they were travelling overturned in Kalaghatgi taluk of Dharwad district on Thursday night. The accident occurred at Junjanabailu near Anchatageri, when the students of Anchatageri Arabic Madrasa were returning after a visit to Hazrat Sathon Shaheed Dargah. Most of the children are from Hubli. According to sources, there were around 130 persons in the truck, including 125 boys. Two Madrasa teachers and three other staff have been injured, and the driver of the truck is absconding.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X