For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல இந்தியர்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் ஸ்பைவேர்கள்.. உறுதி செய்தது வாட்ஸ் அப்

Google Oneindia Tamil News

Recommended Video

    Indian WhatsApp Users Hit By Israeli Spyware | இந்தியர்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் ஸ்பைவேர்கள்

    டெல்லி: பல இந்தியர்களை குறிவைத்து இஸ்ரேல் ஸ்பைவேர்கள் தாக்கியதாக தகவல்கள் வந்துள்ளது. குறிப்பாக பத்திரிக்கையாளர்கள். சமூக செயற்பாட்டாளர்கள் உள்பட இந்திய பிரபலங்களின் செல்போனுக்கு இஸ்ரேலின் என்எஸ்ஒ சைபர் செக்யூரிட்டி நிறுவனம் வாட்ஸ் அப் சர்வர் மூலம் ஸ்பைவேர்களை அனுப்பி இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் பிரபல ஆங்கில ஊடகத்திடம் உறுதி செய்துள்ளது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேலிய ஸ்பைவேர்களால் பிரபலங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், இந்த வாரம் பல இந்திய பயனாளர்கள் குறிவைக்கப்பட்டதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மே மாதம் வரை இஸ்ரேல் ஸ்பைவேர்களின் கண்காணிப்பில் இலக்காக இருந்ததாகவும் நம்பப்படுகிறது.

    மிக துணிச்சலான முடிவு.. டிவிட்டரில் இனி அரசியல் விளம்பரம் வராது.. ஜாக் முடிவு.. ஏன் தெரியுமா?மிக துணிச்சலான முடிவு.. டிவிட்டரில் இனி அரசியல் விளம்பரம் வராது.. ஜாக் முடிவு.. ஏன் தெரியுமா?

    இஸ்ரேல் என்என்ஓ

    இஸ்ரேல் என்என்ஓ

    கடந்த செவ்வாய்கிழமை வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் இஸ்ரேலின் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான என்எஸ்ஓ மீது வழக்கு தொடுத்தது. தனது மனுவில் 1400 வாட்ஸ் அப் பயனர்களுக்கு தீமை தரும் வைரஸை வாட்ஸ் அப் சர்வர் மூலம் அனுப்பியதாக குற்றம்சாட்டி உள்ளது. குறிப்பாக ஊடகவியலாளர்கள், அரசியல் நிபுணர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், 20 நாடுகளில் உள்ள மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோரை இலக்காக நிர்ணயித்து ஸ்பைவேர்களை அனுப்பியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்ட நடவடிக்கை

    வாட்ஸ்அப் தொடர்பு கொண்டவர்களில் தானும் ஒருவர் என்று WION பத்திரிகையாளர் சித்தாந்த் சிபல் ட்வீட் செய்துள்ளார். தொழில்நுட்ப மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தனது டுவிட் பதிவில் கூறியுள்ளார்.

    தகவல் திருட்டு

    தகவல் திருட்டு

    இஸ்ரேல் நிறுவனம் , செல்போன் இயக்கத்தை கையகப்படுத்தி, அவர்களின் தகவல்கள், அழைப்புகள் மற்றும் பாஸ்வேர்டுகள் ஆகியவற்றை கண்டறிவதற்கு ஸ்பைவேர் தாக்குதலை நடத்த வைரஸ்களுக்கு கட்டளைகளை வழங்கி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    சரியான எண்ணிக்கை

    சரியான எண்ணிக்கை

    இலக்குக்கு உள்ளானவர்களின் சரியான எண்ணிக்கையை தெரிவிக்க வாட்ஸ் அப் நிறுவனம் மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தகவல் தனிப்பட்ட முறையில் அனுப்பபட்டு விட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சைபர் தாக்குதல்கள்

    சைபர் தாக்குதல்கள்

    ஏப்ரல் மாதத்தில் ஏறக்குறைய இரண்டு வாரங்கள் இந்திய சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைப் பின்தொடர ஸ்பைவேர்கள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் பேஸ்புக் நிறுவனம் ஒரு சைபர் தாக்குதலைக் கண்டறிந்து தடுத்ததாக அறிவித்திருந்தது.

    English summary
    Several Indian Users Hit By Israeli Spyware, WhatsApp Confirms leading english channel
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X