For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 7 பேர்... இதுவரை நடக்காத கொடூரம்!

Google Oneindia Tamil News

திருப்பதி: ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களில் 7 பேருக்கு முகத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த காயங்கள் இருந்துள்ளது. இது தொடர்பாக மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி முருகேஷன், ‘ஆந்திர போலீசார் தற்காப்பு என்ற பெயரில் 20 பேரை சுட்டுக் கொன்றதை நியாயப் படுத்தவே முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்தில் திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசார், தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டுக் கொன்றனர். செம்மரக்கட்டைகளை கடத்தியதாகவும், தடுக்க முற்பட்ட தங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.

Severe human rights violation in Andhra shoot out case

ஆனால், இது முன்கூட்டியே திட்டமிட்ட என்கவுண்டர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரை இந்த அளவுக்கு என்கவுண்டர் என்ற பெயரில் ஒரே இடத்தில் 20 பேர் கொல்லப்பட்டது இல்லை. அதுவும் ஆயுதம் எதுவும் இல்லாதவர்கள் சுடப்பட்டுள்ளனர். அதனால் தான் ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகமும் ஆந்திர அரசிடம் நடந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை கேட்டுள்ளது. ‘தற்காப்பு என்ற பெயரில் 20 பேரை சுட்டுக்கொன்றதை நியாயப்படுத்தவே முடியாது' என மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரில் 11 பேரின் உடல் ஓரிடத்திலும், மீதமுள்ள 9 பேரின் வேறொரு இடத்திலும் கிடந்தது. அதில், 9 பேர் சடலங்கள் இருந்த இடத்தில் 7 பேர் முகத்திலும், பின்புறத்தில் கழுத்திலும் சுடப்பட்ட காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மேலும், பலரது உடல் எரிந்த நிலையில் காணப்பட்டது. சிலரது வயிறு, தோள்பட்டை, கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. தோல் உரிந்திருந்தது. இறந்தவர்கள் பெரும்பாலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்.

என்கவுண்டரில் கொல்லப் பட்டிருந்தால் தீக்காயங்கள் ஏற்பட்டது எவ்வாறு எனக் கேள்வி எழுந்துள்ளது. முன்கூட்டியே தமிழக தொழிலாளர்களைக் கைது செய்து அழைத்துச் சென்று, அவர்கள் கைகளைப் பின்புறமாகக் கட்டி ஆந்திர போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர் என பலியான தொழிலாளர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Its has come to know that the Andhra police had shot the Tamilnadu laborers in face and body, which is considered to be a severe human rights violation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X