For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய கடற்படை மாலுமி பெண்ணாக மாறியது கண்டுபிடிப்பு...பணியை பறிக்க முடிவு!

இந்திய கடற்படையில் ஆணாக இருந்த போது சேர்ந்தவர், கடந்த ஆண்டு பெண்ணாக மாறியது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : இந்திய கடற்படையில் மாலுமியாக இருந்தவர் பெண்ணாக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்ததையடுத்து அவரை பணியில் நீட்டிக்க முடியாத உத்தரவை பிறப்பிக்க இந்திய கடற்படை பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்திய கடற்படை வரலாற்றிலேயே முதன்முறையாக திருநங்கையாக மாறிய ஆணின் பிரச்னை எழுந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஐஎன்எஸ் ஏக்சிலா கப்பலின் மாலுமியாக இந்திய ஆண் குடிமகன் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நேவி மெகானிக்கல் பொறியியல் பிரிவில் பணிக்கு சேர்ந்துள்ளார், இவருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தனது உடலில் பெண் போன்ற மாறுதல்கள் இருப்பதை உணர்ந்த அந்த மாலுமி கடந்த மாதம் மும்பையில் பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் நீண்ட கூந்தல் வளர்த்துக் கொண்டதையடுத்து, புடவை அணிவது போன்ற செயலிலும் ஈடுபட்டுள்ளார்.

Recommended Video

    Transgender Awareness Camp in Krishnagiri- Oneindia Tamil
     பணி பறிப்பு?

    பணி பறிப்பு?

    இது வரை இது போன்ற பாலின மாறுபாடு பிரச்னையை பாதுகாப்புத்துறை சந்தித்ததில்லை. முதன்முறையாக எழுந்துள்ள இந்த பிரச்னையால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இறுதியில் கடற்படைஅதிகாரிகள் அவர் மாலுமியாக இனியும் பணியாற்ற முடியாது என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

     நடைமுறையில் இல்லை

    நடைமுறையில் இல்லை

    ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க அரசு முயற்சித்து வந்தாலும், போர்க்கப்பலில் பெண்கள் பணியாற்றுவது போன்ற நடைமுறைகள் இதுவரை இல்லை. குறைவான அளவிலே பெண்கள் ராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர், எனினும் மாலுமி, படைவீரர்கள், ஏர்மென் உள்ளிட்ட பணிக்கு ஆண்களே அமர்த்தப்படுகின்றனர்.

     சலுகைகளும் கிடைக்காது

    சலுகைகளும் கிடைக்காது

    இதனால் பெண்ணாக மாறிய அந்த நபர் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் ஏக்சிலா படைதளத்திற்கே திரும்ப அனுப்பப்பட்டுள்ளார். அவருக்கு பணியில் நீட்டிக்க முடியாத ஆணையை கடற்படை பிறப்பிக்க உள்ளதாக தெரிகிறது. ஒரு வேளை அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு பென்சன் உள்ளிட்ட எந்த சலுகைகளும் கிடைக்காது. சுமார் 15 ஆண்டுகள் பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.

     தடை விதித்த அமெரிக்கா

    தடை விதித்த அமெரிக்கா

    அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வாரம் தான் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் ராணுவத்தில் இருக்கும் படை வீரர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் தடை விதித்த உத்தரவிட்டார். இந்நிலையில் இந்திய கடற்படையில் திருநங்கை பிரச்னையை சந்தித்துள்ளது.

    English summary
    An indian Sailor who undergone surgery fir sex change returned to INS Eksila base in Visakhapatnam, the Navy wants her to be discharged under the SNLR .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X