For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் பெண் பாலின விகிதம் சரிவு- இந்திய அளவில் 22-வது இடம்!

By Mathi
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஆண் - பெண் பாலின விகிதம் சரிந்துள்ளதாக அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் பாலின விகிதத்தில் 22வது இடத்தில் இருக்கிறது குஜராத் என்கிறது அந்த அறிக்கை.

குஜராத் மாநில சட்டசபையில் அண்மையில் மாநிலத்தின் சமூக பொருளாதார நிலைமை குறித்த அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Sex ratio dips in Gujarat; ranks 22nd in India

அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள்:

- குஜராத்தில் 2001ஆம் ஆண்டு ஆண்- பெண் பாலின விகிதம் 920 ஆக இருந்தது; இது 2011-ம் ஆண்டு 919ஆக சரிந்துள்ளது.

- அதாவது 1000 ஆண்களுக்கு 919 பெண்கள் என்ற விகிதம் குஜராத்தில் உள்ளது.

- இந்தியாவின் 28 மாநிலங்களில் நடத்தப்பட்ட பாலின விகித ஆய்வில் குஜராத் 22-வது இடத்தில் உள்ளது.

- அதே நேரத்தில் குஜராத்தின் கிராமப்புறங்களில் பாலின விகிதம் சற்றே அதிகரித்தும் உள்ளது.

- குஜராத் கிராமப்புறங்களில் 2001-ல் 945 ஆக இருந்த பெண்கள் பாலின விகிதம், 2011-ல் 949ஆக அதிகரித்திருக்கிறது.

- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குஜராத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் தபி மாவட்டத்தில் பாலின விகிதம் 1007ஆக உள்ளது. இதர பழங்குடி இன மக்கள் வாழும் மாவட்டங்களான தங், தகோட் ஆகியவற்றில் இது 1006, 990ஆக உள்ளது.

- தேசிய அளவில் குழந்தைகள் பாலின விகிதம் (0-6வயது வரை) 2011-ல் 919 ஆக குறைந்துள்ளது; 2001-ல் இது 927ஆக இருந்தது.

- ஆனால் குஜராத்தில் 2001-ல் குழந்தைகள் பாலின விகிதம் 883 ஆக இருந்தது. 2011-ல் இது 890 ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து தற்போதுதான் முதல் முறையாக இந்த விகிதம் எட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The sex ratio in Gujarat has come down to 919 in 2011 from 920 in 2001 as against significant increase of 10 points in the national average during this period, according to the Socio-Economic Review for 2015-16 tabled in the State Assembly recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X