For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களின் மானத்தைக் காட்டிலும் வாக்குரிமையே உன்னதமானது.. சரத் யாதவ் பேச்சால் சர்ச்சை !

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ், பெண்களின் கற்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

பாட்னா: நம் நாட்டு பெண்களின் மானத்தைக் காட்டிலும் வாக்குரிமையே உன்னதமானது என்று ஐக்கிய ஜனதா தளக் கட்சி மூத்த தலைவர் சரத் யாதவின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சரத் யாதவ், இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உயர்ந்த கவுரம் வாக்குரிமை மட்டுமே. அத்தகைய வாக்குகளை பணத்துக்காக மக்கள் விற்கக்கூடாது. நம் நாட்டு பெண்களின் மானத்தைக் காட்டிலும் வாக்குரிமையே உன்னதமானது.

Sexist' Sharad Yadav says daughter's honour not bigger than vote

ஓட்டுக்குப் பணம் கொடுத்தால், வாங்கக்கூடாது என்பதை நாட்டு மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஏனென்றால், ஓட்டு என்பது நாம் பெற்ற மகள்களைப் போன்றதாகும். நமது மகள் அல்லது ஒரு பெண் கற்பிழந்தால், அவள் சார்ந்த சமூகம் மற்றும் ஊர் என அனைவரின் மரியாதை பாதிக்கப்படும் அதேசமயம், வாக்குகளை விற்பதன் மூலம் வாக்குரிமைக்கு களங்கம் ஏற்படுவது என்பது ஒட்டுமொத்த நாட்டையே பாதிக்கும் என்றார்.

சரத் யாதவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வாக்குரிமையின் மேன்மையை உணர்த்துவதற்காகவே அவ்வாறு கூறினேன் என்றார். பெண்களை அவமதிக்கும் வகையில் சரத் யாதவ் பேசியதற்கு பல்வேறு மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
Rajya Sabha MP and Janata Dal (United) leader Sharad Yadav on Tuesday made yet another sexist remark while addressing a gathering of party workers in Bihar. While addressing, Yadav said that the honour of vote comes above the honour of daughter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X