For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏ.கே.கங்குலி மீது போலீஸ் புகார்: பெண் வழக்கறிஞர் தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

AK Ganguly
டெல்லி: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலியால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள் பயிற்சி வழக்கறிஞர், அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பயிற்சி பெண் வழக்கறிஞருக்கு பாலியல் துன்புறுத்தல் எதையும் நான் செய்யவில்லை. இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்றம் சார்பில் குழு அமைக்கப்பட்டதற்கு தேவையே இல்லை. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை சரியாக அணுகவில்லை என்று முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி திங்கள் கிழமை கூறியிருந்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் அவரது வலைப்பூவில், "இவ்விகாரம் தொடர்பாக வதந்திகளை பரப்புபவர்களும், இதை அரசியலாக்க முயற்சி செய்பவர்களும் சட்ட ஆய்வில் இருந்து தப்பிக்கவும், நம்பகத்தன்மையில் இருந்து விலகி நிற்கவும் இதனை செய்கின்றனர்" என பதிவு செய்துள்ளார்.

மேலும், "நான் தெரிவித்த புகார்களை ஒப்புக்கொள்ள வேண்டும். இவ்விவகாரத்தில் தகுந்த நேரத்தில், தக்க நடவடிக்கை எடுக்கும் திறன் எனக்கு உள்ளது. எனவே, என் தனிப்பட்ட சுதந்திரத்தை முழுமையாக மதித்து நடக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகளை மறுப்பவர்கள் உச்ச நீதிமன்றதை அவமரியாதை செய்கின்றனர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

English summary
A former law intern, who accused ex-Supreme Court judge A K Ganguly of sexual harassment, has hit back at him for denying the charges and hinted that she may file a police complaint.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X