For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெஹல்கா தருண் தேஜ்பாலுக்கு மேலும் 4 நாள் போலீஸ் கஸ்டடி

By Mathi
Google Oneindia Tamil News

tarun tejpal
பனாஜி: பலாத்கார வழக்கில் சிக்கியிருக்கும் டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு மேலும் 4 நாள் போலீஸ் கஸ்டடி நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

சக பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்தார் என்பது தருண் தேஜ்பால் மீதான வழக்கு. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தருண் தேஜ்பால் தற்போது கோவா போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்.

அவரிடம் கடந்த 6 நாட்களாக கோவா போலீசார் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தினர். அத்துடன் தேஜ்பாலுக்கு ஆண்மை பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில் தருண் தேஜ்பாலின் கஸ்டடியை நீட்டிக்கக் கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதை ஏற்ற நீதிமன்றம், தருண் தேஜ்பாலுக்கு மேலும் 4 நாட்கள் போலீஸ் கஸ்டடியை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

English summary
Goa Police has got the custody of Tehelka Founder Editor Tarun Tejpal for four more days in connection with the sexual assault case. Tejpal's police custody was extended on Saturday by Panaji Judicial Magistrate First Class when he was produced by the court after the expiry of his six-day custody.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X