For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷாருக்கானுக்கு பிரியாணி விருந்து வைத்த சானியா மிர்சா

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஷாருக்கான் உள்ளிட்ட, 'தில்வாலே' திரைப்பட குழுவினருக்கு, ஹைதராபாத்தில், டென்னிஸ் பிரபலம் சானியா மிர்சா பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். இதற்காக ஷாருக்கான் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான், கஜோல் உள்ளிட்டோர் நடிப்பில், பாலிவுட்டில் தயாராகியுள்ள 'தில்வாலே' திரைப்படம், டிசம்பர் 18ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இதையொட்டி ஷாருக்கின் ரசிகையான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, படக்குழுவினரை ஹைதராபாத் அழைத்து, பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.

இதற்கு டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் ஷாருக்கான். விருந்து நிகழ்ச்சியில், கஜோல், பரா கான், வருண் தவான் மற்றும் வருண் ஷர்மா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். ஷாருக் தனது டிவிட்டர் தளத்தில் இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

English summary
Shah Rukh Khan, Varun Dhawan, Kirti Sanon and other cast members of forthcoming film "Dilwale" joined Sania Mirza in her Biryani party, they were "served" a sumptous meal of biryani by tennis star in Hyderabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X