For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லண்டனில் 'அவரை' நான் சந்திக்கவே இல்லீங்கோ: ஷாருக்கான்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியை லண்டனில் சந்தித்து பேசவில்லை என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மோசடி புகாரில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு உதவியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் மோடியை லண்டனில் சந்தித்து பேசியதாக மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

நான் ஓய்வு எடுக்க லண்டனுக்கு செல்லவில்லை. நான் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்தேன். மாலையில் படப்பிடிப்பு முடியும் மறுபடியும் காலையில் துவங்கிவிடும் என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

கடைசி நாள்

கடைசி நாள்

படப்பிடிப்பின் கடைசி நாள் அன்று மட்டும் இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலை 6 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு நான் லண்டனுக்கு கிளம்பிச் சென்றேன் என்கிறார் ஷாருக்.

குழந்தைகள்

குழந்தைகள்

மதியம் 2 மணிக்கு நான் லண்டனை அடைந்தேன். மறுநாள் என் மகள் மற்றும் மகனின் பள்ளி அட்மிஷன் வேலையாக அலைந்து கொண்டிருந்தேன். வேறு எதற்கும் நேரமே இல்லை என ஷாருக் கூறியுள்ளார்.

லலித் மோடி

லலித் மோடி

லண்டனில் நான் லலித் மோடியை சந்திக்கவில்லை. நான் அவரை சந்தித்து பேசியிருந்தால் இந்நேரம் அது உலகத்திற்கே தெரிய வந்திருக்கும் என்கிறார் ஷாருக்கான். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வாத்ரா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வாத்ரா தன்னை சந்தித்து பேசியதாக லலித் மோடி தெரிவித்ததை அடுத்து ஷாருக்கான் விளக்கம் அளித்துள்ளார்.

English summary
Bollywood actor Shah Rukh Khan has categorically denied that he met former IPL commissioner Lalit Modi in London. Khan is a co-owner of Indian Premier League team Kolkata Knight Riders. His denial came after Modi alleged he had private meetings with Priyanka and Robert Vadra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X