For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் மகன் ஆம் ஆத்மி கிடையாது.. ஷாகீன் பாக்கில் சுட்டவரின் அப்பா பேட்டி.. ஆம் ஆத்மி கடும் பாய்ச்சல்!

டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய என் மகன் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் கிடையாது என்று அவரின் அப்பா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இதோ உங்கள் சுதந்திரம்.. மாணவர்களை சுட்ட ராம் பகத் கோபால்

    டெல்லி: டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய என் மகன் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் கிடையாது என்று அவரின் அப்பா தெரிவித்துள்ளார். இதனால் ஆம் ஆத்மி கட்சி டெல்லி போலீஸ் மீது கடுமையாக பாய்ந்துள்ளது.

    டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலை அருகே இருக்கும் ஷாகீன் பாக் பகுதியிலும் துப்பாககி சூடு நடந்தது. சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் உள்ளே புகுந்த நபர் இப்படி சுட்டார். மர்ம நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வந்து அங்கு வானத்தை நோக்கி சுட்டார்.

    இது இந்துக்களின் நாடு, இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் வெளியேற வேண்டாம். ஜெய் ஸ்ரீ ராம் என்று அவர் முழக்கமிட்டார். இந்த துப்பாக்கி சூடு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் சுட்ட மர்ம நபர்.. ஆம் ஆத்மி உறுப்பினர்.. போலீஸ் ஷாக் தகவல்! டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் சுட்ட மர்ம நபர்.. ஆம் ஆத்மி உறுப்பினர்.. போலீஸ் ஷாக் தகவல்!

    போலீஸ் என்ன

    போலீஸ் என்ன

    ஷாகீன் பாக் பகுதியில் துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் கபில் குஜ்ஜார். இவர் டெல்லியை சேர்ந்தவர். இவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லி போலீஸ் இதற்கான புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த விஷயத்தை கபில் குஜ்ஜாரின் அப்பாவே மறுப்பு தெரிவித்து இருக்கிறார். நாங்கள் ஆம் ஆத்மியில் இருப்பதாக போலீஸ் கூறுகிறது. ஆனால் நாங்கள் ஆம் ஆத்மி கிடையாது.

    எங்கள் குடும்பம்

    எங்கள் குடும்பம்

    எங்கள் குடும்பத்தில் யாரும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் கிடையாது. ஆம் ஆத்மி கூட்டம் ஒன்று எங்கள் பகுதியில் நடந்தது. அதில் கலந்து கொண்டோம்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் அது. அப்போது எங்கள் பகுதி மக்கள் எல்லோரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு சார்பாக நடந்த விழா அது. போலீஸ் இதில் தவறான தகவல்களை தருகிறது என்று, கபில் குஜ்ஜாரின் அப்பா குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.

    மறுப்பு

    மறுப்பு

    அதேபோல் இந்த விஷயத்தை ஆம் ஆத்மி கட்சியும் மறுத்து இருக்கிறது. அதில், பாஜக எங்கள் மீது எப்படியாவது பழி போட வேண்டும் என்று நினைக்கிறது. எங்கள் மீது எப்படியாவது கறை பூச வேண்டும் என்று நினைக்கிறது. அதனால் இப்படி ஒரு பொய்யான புகாரை இப்போது சொல்லி இருக்கிறது. இதை நிரூபிக்க பாஜகவிடம் ஆதாரங்கள் இல்லை. அதனால் ஒரு புகைப்படத்தை மட்டும் தேவையில்லாமல் பரப்பி வருகிறார்கள்.

    அமித் ஷா கோபம்

    அமித் ஷா கோபம்

    அமித் ஷாவின் தந்திரம் இது. தேர்தல் நடக்கும் போதெல்லாம் அமித் ஷா இப்படியான தந்திரங்களை செய்வது வழக்கம்தான். இதற்கு டெல்லி போலீஸ் தலையாட்டுகிறது. டெல்லி போலீஸ் இதற்கு தங்கள் சட்டையில் தாமரை சின்னத்தை அணிந்து கொள்ளலாம், பாஜக சொல்வதை டெல்லி போலீஸ் அப்படியே கேட்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி குறிப்பிட்டுள்ளனர்.

    English summary
    Shaheen Bagh Firing: My son is not Aam Aadmi says shooters father, AAP gets a chance to attack Delhi police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X