For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக அழகி சில்லர் குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார் சசிதரூர்!

உலக அழகி சில்லர் குறித்து கிண்டலடித்ததற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மன்னிப்பு கோரியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    உலக அழகி பட்டம் வாங்கிய மனுஷி சில்லருக்கு இவ்வளவு திறமையா!-வீடியோ

    டெல்லி: உலக அழகி சில்லர் குறித்து கிண்டலடித்ததற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மன்னிப்பு கோரியுள்ளார்.

    அரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர் இந்த ஆண்டின் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பெற்றோர் இருவரும் டாக்டர்கள்.

    டெல்லியில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில் பயின்ற இவர், பின்னர் சோன்பேட் நகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

    சசிதரூர் டிவிட்

    சசிதரூர் டிவிட்

    ஏற்கனவே இந்திய அழகி பட்டம் வென்ற இவர் சீனாவின் சானியா நகரில் நடந்த, 2017ம் ஆண்டிற்கான உலக அழகிப்போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றார். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மிகப்பெரிய தவறு என்றும், சர்வதேச அளவில் இந்திய பணத்திற்கு மதிப்பு உள்ளது.

    சில்லறையோடு ஒப்பிட்ட சசிதரூர்

    சில்லறையோடு ஒப்பிட்ட சசிதரூர்

    அதனால் தான் சில்லர்கூட உலக அழகியாகிவிட்டார் எனப் பதிவிட்டிருந்தார். அதாவது ஹிந்தியில் சில்லர் என்றால் சில்லறை என்ற அர்த்தம் வரும் வகையில் சசிதரூர் டிவிட்டியிருந்தார்.

    மன்னிப்பு கோரி சசிதரூர்

    மன்னிப்பு கோரி சசிதரூர்

    இதற்கு தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தனது செயலுக்காக சசிதரூர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    புண்பட்டிருந்தால் மன்னிப்பு..

    சில்லர் குறித்து தான் விளையாட்டாக கருத்து கூறியதாகவும், யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சசிதரூர் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Shashi tharoor appologies for teasing miss world Chiller. Guess the pun IS the lowest form of humour, & the bilingual pun lower still! Apologies to the many who seem to have been righteously offended by a light-hearted tweet today. Certainly no offence was meant to a bright young girl whose answer i've separately praised. Please: Chill! - shashi tharoor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X