For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பிஸ்டல்" தரூர்.. சிஸ்டரால்" வந்த குழப்பம்!

’சிஸ்டர்’ என்கிற வார்த்தை தவறுதலாக ‘பிஸ்டல்’ என்று காதில் விழுந்ததால் சசி தரூர் கைது செய்யப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர் : 'சிஸ்டருக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்' என்று சொன்னது, 'பிஸ்டலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்' என்று காதில் விழுந்ததால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கைதானதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும், திருவனந்தபுரம் எம்.பி.,யுமான சசி தரூர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து வரும் தனது தங்கைக்காக காத்து இருந்தார்.

Shashi Tharoor arrested for wrong word?

அப்போது அவரிடம் பேசிய பயணி ஒருவர், 'எதற்காக இங்கு காத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'வெயிட்டிங் பார் மை சிஸ்டர்' என்று சசி தரூர் பதிலளித்து உள்ளார். ஆனால், அந்த பயணியின் காதில் 'சிஸ்டர்' என்கிற வார்த்தை, 'பிஸ்டல்' என்று காதில் விழுந்ததை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் சென்று இந்த விஷயத்தைக்கூற அவர்கள் சசி தரூரை கைது செய்து விசாரித்து உள்ளனர். விசாரணையில், அவரிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்றும், தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாலேயே கைது செய்யப்பட்டார் என்றும் தெரியவந்ததை அடுத்து, அவரிடம் மன்னிப்பு கேட்டு போலீஸார் அவரை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள சசி தரூர், எந்த வித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

என்னிடம் விசாரித்த போலீஸாரிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்று நான் தெளிவுபடுத்தியதை அடுத்து அவர்கள் என்னை வெளியேற அனுமதித்தனர். ஆனால், மீடியா நண்பர்கள் தங்களின் கற்பனை வளம் நம்பமுடியாத வகையில் உள்ளது என்று அவர் பதிவிட்டு உள்ளார்.

English summary
Congress MP Shashi Tharoor was allegedly arrested for a wrong word in Jaipur Airport, but the officials have refuted this as false one.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X