For Daily Alerts
Just In
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மருமகன் கைது!
டெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மருமகன் இம்ரான் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகாவும் அவரது கணவர் இம்ரானும் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் பிரிந்தனர். இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர்.

இதனிடையே இம்ரான் மீது டெல்லி போலீசில் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் லத்திகா புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பெங்களூருவில் இருந்த இம்ரானை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இதற்காக 2 நாட்களுக்கு முன்னரே டெல்லி போலீசார் பெங்களூரு வந்து முகாமிட்டிருந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.