For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். பயணத்தால் இந்தியாவிற்கு அவப்பெயர்... மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: சிவசேனா

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டதால், உலகநாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு அவப்பெயர் உண்டாகி இருப்பதாகவும், எனவே இதற்கு அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய போது, திடீரென பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. அங்கு அவர் அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசினார்.

Shiv Sena attacks PM Modi's surprise visit to Pakistan

மோடியின் இந்தத் திடீர் பாகிஸ்தான் பயணம் குறித்து பிற கட்சித் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான சிவசேனா, மோடியின் பாகிஸ்தான் பயணத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் சஞ்சீவ் கனௌலி கூறுகையில், ''பாகிஸ்தானுக்கு மோடி திடீர் பயணம் மேற்கொண்டது, சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு அவப்பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. இதற்காக, நாட்டு மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Siv Sena on Saturday attacked Prime Minister Narendra Modi's surprise visit to Pakistan and said that he should seek an apology from the nation for taking such an "objectionable step".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X