For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன இருந்தாலும் ரஜினி 'நம்மவர்'.. ராஜ் தாக்ரேவின் மாநில பாசத்தை பாருங்கள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜ் தாக்கரேவுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு | டிஎஸ்பி பணியை இழக்கிறாரா ஹர்மன்பிரீத்- வீடியோ

    மும்பை: மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ் தாக்ரேவை இன்று நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பின்போது அரசியல், சமூக விஷயங்கள் குறித்தெல்லாம் பேசியதாக ராஜ்தாக்ரே, ஆங்கிலத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில், பிரபல நடிகரான ரஜினிகாந்த் மனைவி, லதா ரஜினிகாந்த் தன்னை சந்தித்ததாக, தெரிவித்திருந்தார்.

    அதில் என்ன விஷயம் என்கிறீர்களா? அதே ராஜ்தாக்ரே ஆங்கிலத்தில் ட்வீட் செய்யும் முன்பாக மராத்தியிலும் ட்வீட் செய்திருந்தார். அதில்தான் விஷயமே உள்ளது.

    சிவாஜிராவ் கெய்க்வாட்

    சிவாஜிராவ் கெய்க்வாட்

    ராஜ்தாக்ரேவின் மராத்தியில், சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்த் என்று ரஜினியை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். ரஜினிகாந்த் பிறப்பால் மராத்தியராகும். மராத்திய மண்ணின் மைந்தர்களுக்கே மகாராஷ்டிராவில் முதல் உரிமை என்பதே ராஜ்தாக்ரே மாமனாரும் சிவசேனை கட்சி முன்னாள் தலைவரான மறைந்த பால்தாக்ரே கொள்கை. ராஜ்தாக்ரேவுக்கும் அதே கொள்கைதான்.

    (ராஜ் தாக்ரே மராத்தி ட்வீட்டின், ஆங்கில மொழி பெயர்ப்பு- The wife of the well-known Tamil actor Shivajirao Gaikwad alias Rajinikanth, Mrs. Lata Rajinikanth today greeted Shri Rajasheb Thakre and Mrs. Sharmila Thakre at Krishnakunj's residence. Politics, social work, and cinema were discussed equally. | Raj Thackeray's Twitter Team)

    கேள்விக்குறி

    பால்தாக்ரே மற்றும் ராஜ்தாக்ரேவுடன் ரஜினி மற்றும் குடும்பத்தாருக்கு நல்ல உறவு உள்ளது. மராத்தியர் என்பதால்தான் ரஜினி மீது தாக்ரே குடும்பத்திற்கு இவ்வளவு பாசமா என்ற கேள்வியை ராஜ்தாக்ரேவின் மராத்தி ட்வீட் எழுப்பியுள்ளது.

    நம்மவர் ரஜினி

    நம்மவர் ரஜினி

    என்னதான் இருந்தாலும், ரஜினி நம்மவர் என்ற எண்ணம் ராஜ்தாக்ரேவுக்கு இருப்பதையே அவரது ட்வீட் உணர்த்துகிறது. ஆங்கிலத்தில் வேறு மாதிரியும், மராத்தியில் தனது மாநில மக்களுக்கு தான் சொல்ல வந்த தகவல் புரியும்படியும் இரு வகை ட்வீட்டுகளை வெளியிட்டு, மாநில பாசத்தை காட்டிவிட்டார் ராஜ்தாக்ரே.

    கண்டிப்பார்களா?

    கண்டிப்பார்களா?

    இதுபோன்ற உள் குத்து வேலைகளால்தான் தமிழ் அமைப்புகள் ரஜினி அரசியலை அவர் சார்ந்த மாநிலத்தோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்கின்றன. ஆனால் அவ்வாறு கலைஞர்களுக்கு மொழி தடையில்லை என கூறும் நடுநிலையாளர்கள், ராஜ்தாக்ரே ட்வீட்டை கண்டிப்பார்களா?

    English summary
    The wife of the well-known Tamil actor Shivajirao Gaikwad alias Rajinikanth, Mrs. Lata Rajinikanth today greeted me' says Raj Thackeray.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X