For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அது நான் கொடுத்த பேட்டி அல்ல.. நான் யாருக்கும் பேட்டி தரவில்லை.... மல்லையா

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுக்கு வந்தால் நீதி கிடைக்காது என்று கூறி சன்டே கார்டியன் பத்திரிகைக்கு விஜய் மல்லையா அளித்த பேட்டி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தான் அந்தப் பேட்டியைத் தரவில்லை என்று மல்லையா மறுத்துள்ளார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 17 வங்கிகளில் கிட்டத்தட்ட ரூ. 9000 கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிப் போய் விட்டார் மல்லையா. அவருக்கு ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட்டை ஹைதராபாத் கோர்ட் பிறப்பித்துள்ள்து. மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் நோட்டீஸ் விட்டுள்ளது.

இந்த நிலையில் சன்டே கார்டியன் பத்திரிகையில் மல்லையாவின் பேட்டி வெளியானது. அதில் நான் இப்போது இந்தியா வந்தால் எனக்கு நியாயம் கிடைக்குமா என்று தெரியவில்லை. இப்போதைக்கு நான் இந்தியா வருவேனா என்றும் தெரியாது எனக் கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்படியே ஷாக் ஆயிட்டேன்!

அப்படியே ஷாக் ஆயிட்டேன்!

இந்த நிலையில் தற்போது தான் அப்படி ஒரு பேட்டியே தரவில்லை என்று மல்லையா மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டில், பத்திரிகை செய்திகளைப் பார்த்து நான் ஷாக் ஆகி விட்டேன்.

நான் அப்படிச் சொல்லவில்லை

நான் அப்படிச் சொல்லவில்லை

நான் சன்டே கார்டியனுக்கு அளித்ததாக கூறப்படும் பேட்டியை பரிசோதித்துக் கூடப் பார்க்காமல் மற்ற மீடியாக்கள் அப்படியே வெளியிட்டுள்ளன. உண்மையில் நான் அந்தப் பேட்டியையே தரவில்லை என்று கூறியுள்ளார் மல்லையா.

இல்லை கொடுத்தார்!

இல்லை கொடுத்தார்!

ஆனால் அவரது டிவிட்டுக்கு சன்டே கார்டியன் பதிலளித்துள்ளது. அதில், மல்லையா கொடுத்த பேட்டிதான் அது என்று சன்டே விளக்கியுள்ளது. இமெயில் மூலம் மல்லையா கொடுத்த பேட்டி அது என்றும் கார்டியன் கூறியுள்ளது.

45 மணி நேரம் கழித்து மறுப்பது ஏன்?

45 மணி நேரம் கழித்து மறுப்பது ஏன்?

இதுகுறித்து அந்தப் பேட்டியை எடுத்தவரான செய்தியாளர் அபிநந்தன் மிஸ்ரா வெளியிட்டுள்ள டிவிட்டில், மல்லையாவின் நண்பரான, வக்கீலும் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார் மல்லையா. ஆனால் பேட்டி வெளியாகி 45 மணி நேரம் கழித்து மறுப்பது ஏன் என்று தெரியவில்லை என்று கேட்டுள்ளார்.

என்ன சொன்னார் மல்லையா?

என்ன சொன்னார் மல்லையா?

அந்தப் பேட்டியில் நான் ஒரு இந்தியன். நிச்சயம் நான் நாட்டுக்குத் திரும்பி வருவேன். ஆனால் இப்போது எனது நியாயத்தை எடுத்துச் சொல்ல வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.

இப்போது வர மாட்டேன்

இப்போது வர மாட்டேன்

எனவே நான் நாடு திரும்ப விரும்பினாலும் நியாயமான விசாரணை நடக்குமா என்பது சந்தேகமாக இருப்பதால் இப்போது நான் வருவேனா என்றுதெரியவில்லை என்று கூறியிருந்தார் மல்லையா.

டைம் வேஸ்ட் பண்ணாதீங்க

டைம் வேஸ்ட் பண்ணாதீங்க

இந்த நிலையில் மல்லையா இன்னொரு டிவிட்டும் போட்டுள்ளார். இங்கிலாந்திலும் கூட என்னை மீடியாக்கள் வேட்டையாடுகின்றன நான் மிடியாக்களுடன் பேச மாட்டேன். எனவே என்னைத் தேடி நேரத்தை வேஸ்ட் பண்ணாதீர்கள் என்று கூறியுள்ளார் மல்லையா.

English summary
Vijaya Mallya has refused that he had not given any interview to Sunday Guardian as he is not ready to meet the press.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X