For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீடுகள் மீது சரிந்து விழுந்த ராட்சத கிரேன்.. நெஞ்சை பதைபதைக்கும் ஒடிசாவின் துயரங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஃபனி புயலால் வீடுகள் மீது சரிந்து விழுந்த ராட்சத கிரேன்

    புவனேஸ்வர்: நாம் கஜா, தானே, வர்தா என பல வலிமையான புயலின் கோரங்களை உணந்தவர்கள் என்றாலும், ஒடிசாவை தாக்கியுள்ள ஃபனி புயல் மிக கோரமான முகத்தை காட்டிச் சென்றுள்ளது.

    ஒடிசாவின் பூரி பகுதியில் இன்று கரையை கடந்த ஃபனி புயல் காரணமாக ஒடிசாவின் புவனேஸ்வர், பூரி உள்பட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.அவற்றின் சில நிகழ்வுகள் நிச்சயம் நம்மை நிலைகுலைய வைக்கும்.

    Shocking Video of Giant Crane Near AIIMS Bhubaneswar collapses on a residential colony

    ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் எய்ம்ஸ் மருத்துமனை அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து ராட்சத கிரேன் அப்படியே சரிந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது.இதேபோல் எய்ம்ஸ் மருத்துக்கல்லூரி விடுதியின் மேற்கூரை பிடுங்கி கொண்டு அப்படியே காற்றில் பறந்து சென்றது.

    இதேபோல் அங்கு மிகப்பெரிய பிஎஸ்என்எல் டவர் ஒன்று மண்ணில் சரிந்து விழுந்தது. இதேபோல் கடற்கரையை ஒட்டியிருந்த ஒட்டல் ஒன்றுக்குள் ராட்சத அலையால் கடல்நீர் வேகமாக புகுந்தன.

    ஃபனி புயலால் சிதைந்த மாநிலங்கள்.. நீட் தேர்வை ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கைஃபனி புயலால் சிதைந்த மாநிலங்கள்.. நீட் தேர்வை ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை

    இதேபோல் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்று அப்படியே தூக்கி தரையில் மோதி அடிக்கப்பட்டது. இதேபோல் பல காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒடிசாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்ப நீண்ட நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து சரியான புள்ளி விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    English summary
    cyclone fani in odish: Shocking Video of Giant Crane Near AIIMS Bhubaneswar collapses on a residential colony
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X