For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் வீடுகள் மீது சரமாரி கல்வீச்சில் கூட்டாக இறங்கிய ராணுவ வீரர்கள்... வைரலாகும் வீடியோ

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் குடியிருப்பு ஒன்றில் ராணுவ வீரர்கள் கூட்டாக சரமாரியாக கல்வீசித் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வன்முறைகள் நீடித்து வருகிறது. கடந்த 1 மாத காலமாக ராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் தொடருகிறது.

இந்த வன்முறையில் கொத்து குண்டுகளைக் கொண்ட பெல்லட்டுகளை ராணுவம் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ராணுவத்தினர் மீதான கல்வீச்சு சம்பவங்களே இத்தகைய நிலைமைக்கு காரணம் என கூறப்படுகிறது.

தற்போது ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் காஷ்மீரில் ஒரு தெருவில் நின்று கொண்டு வீடுகள் மீது சரமாரியாக கற்களை வீசி எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ராணுவத்தினரே இத்தகைய செயலில் ஈடுபடலாமா? என்ற விவாதத்தை இந்த வீடியோ உருவாக்கியுள்ளது.

வீடியோ:

English summary
Now a shocking video of men in uniform, believed to be from CRPF and J&K Police, has gone viral on social media platforms. In the video, soldiers are seen pelting stones at the windows of a neighbourhood unprovoked.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X