For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மீது ஷூ வீச்சு!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மீது காலணி வீச்சால் பரபரப்பு.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

பர்கா: பிஜேபுர் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மீது இளைஞர் ஒருவர் காலணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒடிசா மாநிலம் பிஜேபுர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கம்பாரியில் உள்ள பர்பாலி பிளாக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது அவர் மீது காலணி வீசப்பட்டுள்ளது.

Shoes hurled at Odisha CM during Bijepur bypoll campaigning

பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக நவீன் பட்நாயக் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
ஏதோ ஒரு பொருள் நவீன் பட்நாயக்கை நோக்கி வருவதை சுதாரித்த பாதுகாப்பு அதிகாரி துரிதமாக செயல்பட்டு நவீன் பட்நாயக் மீது அது விழாமல் தடுத்தார்.

தொடர்ந்து நவீன் பட்நாயக் மீது காலணியை வீசிய நபரை தன்னுடைய கஸ்டடியில் கொண்டு வந்தார் அந்த நபர். பிடிபட்ட அந்த இளைஞர் பத்மாபுர் பகுதியைச் சேர்ந்த கர்திக் மெஹர் என்றும் அவர் சட்டைப்பையில் இருந்து பாஜகவின் கொடி மற்றும் அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிஜேபுர் தொகுதியில் பாஜக வெற்ற பெற முடியாது என்று விரக்தியில் பாஜகவை சேர்ந்த இளைஞர் தனது கோபத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பாஜக இதனை மறுத்துள்ளது. முதல்வர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், ஆனால் அந்த இளைஞர் குறித்து முழு விசாரணை நடைபெறாத நிலையில் பாஜகவை குறை சொல்வது ஏற்புடையதல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

English summary
Odisha Chief Minister Naveen Patnaik once again had a narrow escape as shoes were thrown at him while he was campaigning for BJD candidate for the upcoming Bijepur bypoll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X