For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமித் ஷா ஒழிகன்னு கோஷம் போட்டா ரூ. 10,000 பணம்.. வைரலாகும் ஆடியோ!

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூட்டத்தில் எதிர்கோஷம் போட பட்டேல் சமூகத் தலைவர் நரேந்திர பட்டேல் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக ஆடியோ வைரலாகியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

அகமதாபாத்: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொண்ட கூட்டத்தில் அவருக்கு எதிராக கோஷம் போட பட்டேல் சமூகத் தலைவர் நரேந்திர பட்டேல் ரூ.10 ஆயிரம் பெற்றதாக அவரும், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பாரத் சிங் சோலங்கியும் பேசிய உரையாடல் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜக பொதுக் கூட்டத்தில் அதன் தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது எதிர்கோஷம் போட பட்டேல் சமூகத் தலைவர் நரேந்திர பட்டேல் ரூ.10 ஆயிரம் பெற்றது தொடர்பான ஆடியோ பேச்சு வெளியாகியுள்ளது.

Shout against Amith Shah, get Rs 10,000!

அந்த ஆடியோவில் நரேந்திர பட்டேலும், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பாரத் சிங் சோலங்கியும் உரையாடுவது போன்று உள்ளது. இந்த ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் அல்ல என்று தெரிவத்த நரேந்திர பட்டேல் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

அதேபோல் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது என்று காங்கிரஸ் கட்சியின் பாரத் சிங் சோலங்கியும் மறுத்துவிட்டார். எனினும் இந்த ஆடியோவை கேட்ட மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ஜெகதீஷ் பாஸ்வர் கூறுகையில் அந்த வீடியோவில் பணம் பெற்றதாக பேசும் நபரின் குரல் நரேந்திர பட்டேலுடையதுதான் என்றார்.

வைரலாக பரவி வரும் இந்த ஆடியோவின் உண்மைத் தன்மை இன்னும் ஆராயப்படவில்லை. பட்டேல் சமூக கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய தனக்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக நரேந்திர பட்டேல் சமீபத்தில் ஒரு ஆடியோவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து விலகினார்.

English summary
An audio clip allegedly of PAAS member, Narendra Patel, surfaced on Friday. In this clip, Patel is heard telling an unidentintified man that he was given Rs 10,000 to shout protest slogans at Amit Shah's programme in Surat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X