For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரி கொலை.. துப்பாக்கியால் சுட்ட மூன்று பேர்.. சிசிடிவி போட்டோ வெளியானது

ரைசிங் காஷ்மீர் இதழின் ஆசிரியர், சுஜாத் புகாரி கொல்லப்பட்ட சம்பவத்தில் காஷ்மீர் போலீஸ் அதிர்ச்சியளிக்கும் வகையில் சிசிடிவி படங்களை வெளியிட்டு, மக்களின் உதவியை கேட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜம்மு - காஷ்மீர் பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரி கொலை- வீடியோ

    ஸ்ரீநகர்: ரைசிங் காஷ்மீர் இதழின் ஆசிரியர், சுஜாத் புகாரி கொல்லப்பட்ட சம்பவத்தில் காஷ்மீர் போலீஸ் அதிர்ச்சியளிக்கும் வகையில் சிசிடிவி படங்களை வெளியிட்டு, மக்களின் உதவியை கேட்டுள்ளது.

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் என்ற இதழை நடத்தி வந்த சுஜாத் புகாரி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று மாலை புகாரியை மர்மநபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். அவர் அலுவலகம் முடித்துவிட்டு வீடு திரும்பும் போது சுடப்பட்டு இருக்கிறார்.

    Shujaat Bukhari Murder: Police released CCTV photo of the three men, who killed him.

    சரியாக 7 மணிக்கு அவர் பாதுகாவலர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த மூன்று பேர், அவரது பாதுகாவலர்களை முதலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதன்பின் புகாரியை சுட்டுள்ளனர். இதில் புகாரி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

    பாதுகாவலர்கள் இருவரும் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே இவர் மீது கடந்த 2000ல் சிலர் தாக்குதல் நடத்தினார்கள். இதனால், அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த கொலையை செய்த மூன்று பேரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சிகளில் இருந்து இந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதில் மூன்று பேர் இருக்கிறார்கள். பைக் ஓட்டும் நபர் ஹெல்மெட் அணிந்துள்ளார். மீதம் இருவர் முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    அவர்கள் வைத்திருக்கும் பையில் துப்பாக்கி இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இவர்களை கண்டுபிடிக்க உதவும்படி போலீஸ், மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    English summary
    Shujaat Bukhari , who is a chief editor of a rising Kashmir magazine is shot and killed by Strangers. Police released CCTV photo of the three men, who killed him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X