For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து மட்டும் பேசுங்க.. எடியூரப்பா உரையின் போது குறுக்கிட்ட சித்தராமையா!

கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா உரையாற்றிய போது நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து மட்டும் பேசுங்கள் என சித்தராமையா குறுக்கிட்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு-எடியூரப்பா உருக்கமான பேச்சு-வீடியோ

    பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா உரையாற்றிய போது நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து மட்டும் பேசுங்கள் என சித்தராமையா குறுக்கிட்டார்.

    உணவு இடைவேளைக்கு பின் கர்நாடக சட்டசபை 3.30 மணிக்கு கூடியது. அப்போது மீதமிருந்த எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

    பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை எடியூரப்பா தாக்கல் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், கர்நாடகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தேன்.

    மோடியும் அமித்ஷாவும்

    மோடியும் அமித்ஷாவும்

    கர்நாடக மக்கள் எனக்களித்த ஆதரவை மறக்க முடியாது என உருக்கமாக கூறினார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தான் தம்மை முதல்வர் வேட்பாளராக்கினர்.

    மக்களின் தீர்ப்புக்கு எதிராக

    மக்களின் தீர்ப்புக்கு எதிராக

    காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு எதிராக பெரும்பாலான மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் மக்களின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும், மஜதவும் ஒன்று சேர்ந்துள்ளன.

    மக்கள் ஏமாற்றம்

    மக்கள் ஏமாற்றம்

    கர்நாடக மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்; நீதி வேண்டுமென்றே நினைக்கின்றனர் கர்நாடக மக்கள் மதிப்பு, மரியாதையுடன் வாழ நினைக்கின்றனர்.

    குறுக்கிட்ட சித்தராமையா

    குறுக்கிட்ட சித்தராமையா

    எனது கடைசி மூச்சு இருக்கும் வரை கர்நாடக மாநில மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் நான் போராடுவேன் என உருக்கமாக பேசினார். அப்போது குறுக்கிட்ட சித்தராமையா நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து மட்டும் பேசுங்கள் என்றார்.

    காங் - மஜத மகிழ்ச்சி

    காங் - மஜத மகிழ்ச்சி

    இதைத்தொடர்ந்து பேசிய எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். எடியூரப்பா ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து காங்கிரஸ் மஜத எம்எல்ஏக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குமாரசாமி டிகே சிவகுமாரின் கையைபிடித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

    English summary
    Siddaramaiah interrupted Yeddyurappa sentiment speech in the assembly. He said yeddyurappa should talk only about vote of confidence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X