For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சியாச்சின் ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடல் கர்நாடகம் வந்தது: சித்தராமையா அஞ்சலி

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஹூப்ளி: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் உடல் கர்நாடக மாநிலம் ஹூப்ளி வந்தடைந்தது. அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சியாச்சின் மலை பிரதேசத்தில் பனி சரிவில் சிக்கி 6 நாட்கள் உயிரோடு இருந்த ஹனுமந்தப்பா, டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் இன்று மதியம் உயிரிழந்தார்.

Siddaramaiah paid tribute Lance Naik Hanumanthappa

இதையடுத்து டெல்லி இருந்து விமானம் மூலம் ஹனுமந்தப்பா உடல் கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு கொண்டு வரப்பட்டது. ஹூப்ளி விமான நிலையத்தில் ஹனுமந்தப்பாவின் உடலுக்கு மாநில முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார். பின்னர் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் சித்தராமையா கூறுகையில், ஹனுமந்தப்பாவின் மரணம் நாட்டிற்கு பெரும் இழப்பு என தெரிவித்தார்.

மேலும் ஹனுமந்தப்பாவி்ன குடும்பத்திற்கு மாநில அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிதியுதவி வழ்ங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 6 ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என கூறினார்.

இதையடுத்து ஹூப்ளி விமான நிலையத்தில் இருந்து அவரது சொந்த ஊரான தார்வார் மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, நாளை அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.

English summary
Karnataka Chief Minister Siddaramaiah paid tribute Lance Naik Hanumanthappa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X