For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்த மசோதா- இந்திய கால்பந்து அணியின் மாஜி கேப்டன் பூட்டியா கட்சி கடும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

காங்டாங்: இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் சட்ட திருத்தத்துக்கு ஹம்ரோ சிக்கிம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள் உள்ளிட்டோருக்கும் இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 1955-ம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டத்தில் இதற்கான திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.

Sikkims Bhutia opposes Citizenship Amendment Bill

இதில் வடகிழக்கு மாநிலங்களுக்கு அளிக்கப்படும் என மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசுங் பூட்டியா தலைமையிலஆ ஹம்ரோ சிக்கிம் கட்சி மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

வங்கதேசத்துக்கு மிக அருகில் உள்ள மாநிலங்களில் சிக்கிமும் இன்று. மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கனவே நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.

தற்போது இத்தகைய குடியுரிமை வழங்குவது என்பது சிக்கிமில் எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கும். இது மிகவும் அபாயகரமானது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை சிக்கிம் அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.

தேவைப்பட்டால் சிக்கிம் அரசுக்கு நாங்கள் அழுத்தம் கொடுப்போம். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கடிதம் அனுப்புவோம். இவ்வாறு பூட்டியா கூறினார்.

English summary
Former Indian football captain and Hamro Sikkim party Founder Bhaichung Bhutia has opposed to the Centre's Citizenship Amendment Bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X