For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்போன் நம்பரை ஆதாருடன் இணைக்க பிப். 2018வரை கெடு- சிம் செயலிழந்து விடும்

2018 பிப்ரவரிக்குள் ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்காவிட்டால் சிம் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்காத சிம்கார்டுகள் வரும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரிக்குள் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின் படி சிம்கார்டுகள் செயலிழப்பு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

SIM cards not linked to Aadhaar to be deactivated after February next year

மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள், கேஸ் மானியம், வங்கி கணக்குகள், சத்துணவு பெற, ஓட்டுநர் உரிமம் பெற என ஆதார் பல்வேறு விஷயங்களுக்கு அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு மொபைல் பயன்படுத்துவதாலும், சிம் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்க வேண்டும் என்று லோக்நிதி என்ற தன்னார்வு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டில் உள்ள அனைத்து சிம் கார்டுகளையும் ஆதார் எண்ணுடன் இணைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்காத சிம் கார்டுகள் வரும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும், 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி சிம் கார்டுகள் செயலிழப்பு செய்யப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
The government is moving ahead with linking Aadhaar with mobile SIM cards and all unlinked phones will be deactivated after February 2018, said informed sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X