For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகமான டிஜிட்டல் வர்த்தகம்!

சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஒருவருடத்தில் மட்டும் 1.24 லட்சம் கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் வர்த்தகம் நடந்து இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.

சென்ற வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது.

Since demonetisation, 933 crore electronic transactions have taken place

இதுகுறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த வருடம் நவம்பரில் இருந்து இந்த வருடம் செப்டம்பர் வரை மிக அதிக டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்திருப்பதாக கூறியுள்ளது. சென்ற டிசம்பரில் மட்டும் 95.75 கோடிக்கும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் நடந்து இருக்கிறது.

மேலும் இதன்படி கடந்த ஒருவருடத்தில் மட்டும் 1.24 லட்சம் கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் வர்த்தகம் நடந்து இருக்கிறது. மேலும் சென்ற ஆண்டு டிசம்பரிலும் இந்த வருடம் செப்டம்பரிலும் அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிகழ்ந்து இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் வர்த்தகம் சீராக அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் இருக்கிறது.

மொபைல் வர்த்தகம் மூலமாக கடந்த மாதம் மட்டும் 8.6 கோடி வர்த்தகம் நடந்து இருக்கிறது. இந்த வருடத்திலேயே இதுதான் மிகவும் அதிகமான மொபைல் வர்த்தகம் ஆகும்.

இதையடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசின் விளம்பர பிரிவான 'டிஏவிபி' என்ற அமைப்பு புதிய திட்டங்கள் நிறைய வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முறையான அறிவுப்பு வரும் ஜனவரியில் வெளியாகும்.

English summary
The electronic transaction volume peaked in December 2016 to 95.75 crore. Come January and the Union Government will launch the second phase of promoting digital payments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X