For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்னை தெரசாவின் அன்பின் துறவற சபை தலைவர் அருட்சகோதரி நிர்மலா மரணம் – மோடி இரங்கல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொல்கத்தா: அன்னை தெரசா நிர்மாணித்த அறக்கட்டளையை நிர்வகித்து வந்த அருட்சகோதரி நிர்மலா ஜோஷி இன்று காலமானார் அவருக்கு வயது 81.

1934ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவரான நிர்மலா, பாட்னாவில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் கல்வி பயின்றார். அதன்பின் அன்னை தெரசாவை பற்றி கேள்விப்பட்டதும் அவரை போன்று சேவை செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து ரோமன் கத்தோலிக்கராக மதமாற்றம் செய்துகொண்ட அவர், தெரசா நிறுவிய அன்பின் பணியாளர் சபையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Sister Nirmala, who headed Missionaries of Charity after Mother Teresa, dies

1997ம் ஆண்டு தெரசாவின் மறைவிற்கு பின், அன்பின் பணியாளர் சபை தலைவராக அருட் சகோதரி நிர்மலா ஜோஷி பொறுப்பேற்றார். 2009ம் ஆண்டு அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

சிலகாலம் உடல்நலம் குன்றியிருந்த சகோதரி நிர்மலா இன்று தனது 81வது வயதில் கொல்கத்தாவில் காலமானார். தற்போது அன்பின் பணியாளர் சபையின் தலைவராக ஜெர்மனியை சேர்ந்த மேரி பிரேமா பியரிக் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மமதா இரங்கல்

நிர்மலா ஜோஷியின் மரணத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். சகோதரியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள அவர், கொல்கத்தா மட்டுமல்ல உலகமே உங்களை இழந்து தவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

சகோதரி நிர்மலாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏழை, எளியவர்களின் நலனுக்காக தன்னையே அற்பணித்துக்கொண்டவர் நிர்மலா என்று கூறியுள்ளார். சகோதரி நிர்மலாவை இழந்து வாடும் மிஷனரீஷ் ஆப் சாரிட்டி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Sister Nirmala Joshi, the former superior general of the Missionaries of Charity, has died. Sister Nirmala had replaced Mother Teresa as the superior general in 1997.
Read in English: Sister Nirmala passes away
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X