For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் சாலை விபத்து: புத்தாண்டு கொண்டாடி திரும்பிய கல்லூரி மாணவர்கள் 6 பேர் சாவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த இன்ஜினியரிங் மாணவர்கள் வந்த காரும், எல்பிஜி டேங்கர் லாரியும் மோதிக் கொண்ட சம்பவத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர்.

திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள வர்கலா கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடிவிட்டு, தங்களது கல்லூரி விடுதிக்கு இன்று காலை திரும்பிக் கொண்டிருந்த பி.டெக் மூன்றாமாண்டு மாணவர்கள் வந்த காரும், எதிரே வந்த டேங்கர் லாரியும் சாத்தனூர் அருகே நேருக்கு நேர் மோதியது.

இதில், 6 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் கார் அப்பளம் போல நொருங்கியதால், மாணவர்களின் உடல்களை காரில் இருந்து வெளியே எடுக்க கடும் சிரமம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் டி.கே.எம். கொல்லம் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Tragedy struck as six engineering students returning after New Year revelry were killed when their car and an LPG tanker collided in the wee hours of the day at nearby Chathannur. According to police, the victims, all men in third year of B.Tech, were heading to their campus after the New Year celebrations at the beach resort Varkala in neighbouring Thiruvananthapuram District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X