For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.66 லட்சம் சம்பளத்தில் 6 ஐ.ஐ.எம். மாணவர்களை பணியமர்த்திய துபாய் நிறுவனம்

By Siva
Google Oneindia Tamil News

கொல்கத்தா: துபாயைச் சேர்ந்த துனியா என்ற நிதி நிறுவனம் ஐ.ஐ.எம். மாணவர்கள் 6 பேருக்கு வருடாந்திர ஊதியம் ரூ.66 லட்சம் அளித்து அவர்களை வேலைக்கு எடுத்துள்ளது.

ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பிற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களை விட அதிக சம்பளம் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அபுதாபியில் உள்ள துனியா பைனான்ஸ் என்ற நிறுவனம் கொல்கத்தா மற்றும் அகமாதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்.களில் படிக்கும் 6 எம்.பி.ஏ. மாணவர்களை வேலைக்கு எடுத்துள்ளது. அவர்களின் ஆண்டு வருமானம் வரி பிடித்தம் போக ரூ.44 லட்சம் அல்லது வரி பிடிக்காமல் ரூ.66 லட்சம் ஆகும். இது தவிர அவர்களின் வேலையை பார்த்து போனஸ் வேறு வழங்கப்படுமாம்.

துனியா பைனான்ஸ் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் படித்தவர்களால் கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது.

துனியா கம்பெனியின் நிறுவனர், எம்.டி., சி.இ.ஓ.வான ராஜீவ் காகர் ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் படித்து கடந்த 1987ம் ஆண்டு பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Six Indian management graduates from IIMs have landed themselves a lucrative job with an annual pay of Rs 44 lakh each from a Dubai-based finance firm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X