For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வயது 66.. சேலையை வரிந்து கட்டிக் கொண்டு மராத்தானில் ஓடிய மகா. பாட்டி!

Google Oneindia Tamil News

Sixty-six-year-old granny runs 'marathon' in a saree in Maharashtra
பாராமதி, மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில், 66 வயதுப் பெண் ஒருவர் சேலையுடன், மராத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டதை அனைவரும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.

அந்தப் பாட்டியின் பெயர் லதா பகவான் கரே. இவர் பாராமதியில் நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றார். மூத்த குடிமக்களுக்கான 3 கிலோமீட்டர் மராத்தான் பிரிவில் கலந்து கொண்டு ஓடினார். அதை விட முக்கியமானது இவர் வெற்றி பெற்றதுதான்.

66 வயதில் பலரும் வேகமாக நடக்கவே பயப்படுவார்கள். பொடி நடையாக வாக்கிங் மட்டுமே போவார்கள். ஆனால் இந்தப் பாட்டியோ மின்னல் வேகத்தில் புடவையுடன் ஓடியதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போயினர்.

இவர் பிம்பிளி என்ற பகுதியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட இளைஞர்களுக்குப் போட்டியைக் கொடுக்கும் வகையில் இவர் விறுவிறுப்பாக ஓடியது அனைவரையும் கவர்ந்தது.

மகாராஷ்டிரப் பெண்கள் அணியும் பாரம்பரிய உடையில் இவர் கலந்து கொண்டார். காலில் செருப்பு கூட கிடையாது. இவருக்கு ரூ. 5000 பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் 4 பிரிவுகளில் மொத்தம் 4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் .. ஹீரோயின் லதாதான்

English summary
Lata Bhagwan Kare ran in the senior citizen's category and won the 3 km race at the Baramati Marathon. At 66, most people would have retired and exercise for them is usually a slow-paced morning walk. That's not the case with Lata Bhagwan Kare though. A resident of Pimpli in Maharashtra, Kare surprised everyone at the local marathon last weekend. To run your first marathon at 66 is surprising but to be faster than your much younger opponents is nothing short of a miracle. Lata Bhagwan Kare did just that at the Baramati Marathon in Maharashtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X