For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பனாமா பேப்பர்ஸ்" பணம் பதுக்கியவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது...அருண்ஜேட்லி !

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் வெளிநாடுகளில் பணம் பதுக்கியவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இதுதான் "பனாமா பேப்பர்ஸ்".

Sleepless nights ahead for illegal Panama account holders

தற்போது இந்த விவகாரம் இந்தியாவில் அடுத்த சர்ச்சையாகக் கிளம்பியுள்ளது. இதில் இந்தியர்கள் 500 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து பேசிய ஜேட்லி, இந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பணம் பதுக்கியுள்ளது குறித்து முழுமையாக விசாரிக்கப்படும். அதுவரை அவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக பனாமா பேப்பரை முன்வைத்து வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் பிரபலங்கள் பணம் பதுக்கியுள்ளனர் என்பது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாகவும் ஜேட்லி கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் சட்ட ரீதியான கணக்குகள் எது, சட்டத்துக்குப் புறம்பான கணக்குகள் எது என விசாரணை நடத்தப்படும். சட்ட விரோதமாக பணத்தை பதுக்கி உள்ளனர் என்று தெரிந்தால் முழுவதுமாக அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்தும் சரிசெய்யப்படும் என்றார்.

English summary
union finance minister Arun Jaitley said, Sleepless nights ahead for illegal Panama account holders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X