For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொகுதி ஒன்று.. தேர்தல் மட்டும் 3 கட்டம்.. பரபரக்கும் அனந்த்நாக்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections: kashmir: ஒரு தொகுதிதான் ஆனால் 3 தேர்தல்.. காஷ்மீரில் வினோதம்- வீடியோ

    ஸ்ரீநகர்: இந்திய தேர்தல் வரலாற்றில் அவ்வப்போது சில விநோதங்களும் நடைபெறுவதும் உண்டு. அப்படி ஒரு வினோதம் இந்த தேர்தலில் நடைபெறவுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் மக்களவை தொகுதிக்கு நடைபெறும் மக்களவை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.

    இதற்கு முன்னர் இந்தியாவில் நடைபெற்ற எந்த தேர்தலிலும் இப்படி ஒரு தொகுதிக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றதில்லை. அனந்தநாக் தொகுதியில் புல்வாமா, குல்காம், அனந்த்நாக், மற்றும் சோபியன் ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 சட்டசபை தொகுதிகள் வருகிறது.

    Slow polling reported in Anantnag

    இந்த தொகுதியை பொருத்தமட்டில் எப்போதும் குறைவாக வாக்குப் பதிவு நடைபெறுவது வழக்கம். கடந்த மக்களவை தேர்தலின்போது 29% வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்த குறைந்த வாக்கு பதிவில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி வென்றார். அதன் பிறகு அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் தனது எம். பி பதவியை ராஜினாமா செய்தார். அது முதல் இந்த தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகவே உள்ளது. ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாமலே இந்த தொகுதி உள்ளது.

    இந்த தொகுதியில் வாக்கு சதவீதம் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 2016-ம் ஆண்டு ஹிஜ்புல் முஜாஹாதீன் தலைவன் புர்ஹான் வானியின் இறுதி ஊர்வலத்தின் போது பயங்கர கலவரம் ஏற்பட்டது அதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அப்போது வீசப்பட்ட பெல்லட் குண்டுகளால் குழந்தைகளின் பார்வைகள் பறிபோனது. இந்த கலவரமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் இப்பகுதி மக்களுக்கு நிரந்தர சோகத்தையும் வலையையும் உருவாக்கி உள்ளது.

    ஆஹா.. மோடி ஓட்டு போட்டதை விட இதுதாங்க சூப்பர் ஹைலைட் மேட்டர் இன்னிக்கு! ஆஹா.. மோடி ஓட்டு போட்டதை விட இதுதாங்க சூப்பர் ஹைலைட் மேட்டர் இன்னிக்கு!

    இது மட்டும் அல்லாமல் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே நடைபெற்ற வன்முறைகளும் மற்றும் கலவரங்களும் இந்த நான்கு மாவட்டத்தை சேர்ந்த பலரது உயிரை பலி வாங்கியுள்ளது. மொத்த உயிரிழப்பில் 80% பேர் இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள். பொதுமக்களில் 22 பேர், 87 காவல்படையினர், மற்றும் கலவரக்காரர்கள் 66 பேர் உட்பட 169 பேர் இந்த தொகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின் புல்வாமா தாக்குதலில் 40 க்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலைகள் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே மக்கள் பயன்படுத்தப்பட முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது அங்குள்ள வியாபாரிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே தொடர் கலவரங்கள் காரணமாக சுற்றுலாத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் மக்கள் பயன்படுத்த முடியாமல் இருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    இவற்றையெல்லாம் வைத்தே இம்முறை இந்த தொகுதிக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இன்று அனந்த்நாக்கில் தேர்தல் நடைபெறுகிறது. குல்காமில் 29ம் தேதியும், புல்வாமா மற்றும் சோபியனில் மே 6ம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. அனந்த்நாக் மாவட்ட மக்கள் கடந்த தேர்தலில் 40% வாக்களித்தனர். தூரு கோகேர்நாக், குல்காம், தேவ்சர், பஹல்காம் ஆகிய பகுதிகளில் இருந்து கணிசமாக வாக்களிக்க மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலையில் இருந்தே இங்கு வாக்குப் பதிவு மிகவும் மந்த கதியில் தான் நடைபெற்று வருகிறது. வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வருவதற்கு தயங்குவதால் வாக்குப் பதிவு மிக மந்தமாகவே நடைபெறுகிறது.

    English summary
    Slow polling has been reported in Kashmir's Anantnag. This constituency is facing 3 phase poll this time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X