For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய பொருளாதாரம் சரிந்துள்ளது.. சரி செய்ய இதுதான் வழி.. ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கை வெளியீடு

Google Oneindia Tamil News

மும்பை: இன்று, வெளியிடப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆண்டு அறிக்கையின்படி, கட்டமைப்பு சிக்கல் இல்லாவிட்டாலும், வேறு வகையில், இந்திய பொருளாதாரத்தில், மந்தநிலை நிலவுகிறது என்று சுட்டிக் காட்டியுள்ளது.

2018-19ம் ஆண்டுக்கான, ஆண்டு நிதி நிலை அறிக்கையை, ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது. அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்:

Slowdown cyclical, says RBI in its annual report

மந்த நிலை இருந்தபோதிலும், நுகர்வு தேவை மற்றும் தனியார் முதலீட்டை அதிகரிப்பது, 2019-20 ஆம் ஆண்டில் அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மந்த நிலையை மாற்றி துரிதப்படுத்தலாம்.

வங்கி மற்றும் வங்கி சாரா துறைகளை வலுப்படுத்துவது, உள்கட்டமைப்பிற்கான செலவினங்களுக்கான ஒரு பெரிய ஊக்கம் தருதல் மற்றும் தொழிலாளர் சட்டங்கள், வரிவிதிப்பு மற்றும் பிற சட்ட சீர்திருத்தங்கள் போன்ற துறைகளில் மிகவும் தேவையான கட்டமைப்பு சீர்திருத்தங்களை செயல்படுத்துவதை இது, உள்ளடக்கியது. சுலபமாக வர்த்தகம் செயல்படுவதை உறுதி செய்தால், 2024-25 வாக்கில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்.

முதலீடுகள் வேகத்தை இழந்துள்ளன. நுகர்வுதான் இந்தியாவில் தேவையை அதிகரிக்கும் என்றாலும், பொருளாதாரத்தில் நீடித்த உயர் வளர்ச்சியை எட்ட, முதலீடு அதிகரிப்பு அவசியம்.

அதிகப்படியான நிதி இருப்புக்களில் இருந்து அரசிற்கு, 6​​52,637 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. தற்போது இருப்பு நிதி 9 1,96,344 கோடியாக உள்ளது.

புழக்கத்தில் உள்ள கரென்சி 17 சதவீதம் உயர்ந்து 21.10 டிரில்லியன் டாலர் மதிப்பாக உள்ளது. இந்தியாவில் இப்போது நிலவும் பொருளாதார மந்தம் என்பது, சுழற்சியின் கீழ்நோக்கிய மென்மையான சரிவுதான். கட்டமைப்பு சார்ந்தது அல்ல.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Reviving consumption demand and private investment to be in focus in 2019-20, says RBI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X