For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணையப்போகிறார்.. எடியூரப்பா பேட்டியால் கர்நாடக அரசியலில் பரபரப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா விரைவில் பாஜகவில் இணைவார் என்று அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சமீபத்தில்தான் எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரசிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் எடியூரப்பா இன்று இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

SM Krishna will join BJP, asays BJP's state President BS Yeddyurappa

46 வருட காலம் தொடர்ந்து காங்கிரசில் இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. அக்கட்சிக்கு ஒக்கலிகர் ஜாதி வாக்குகளை பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு வகித்தவர்.

மாநிலத்தில் பெருவாரியாக உள்ள லிங்காயத்துகள் ஜாதியினரின் ஆதரவு எடியூரப்பா தயவால் பாஜகவுக்கு கிடைத்து வரும் நிலையில் கிருஷ்ணா வருகை அடுத்தபடியாக பெரும்பான்மையாக உள்ள ஒக்கலிக (கவுடா) ஜாதியினரின் ஆதரவை பாஜகவுக்கு ஈர்த்து தரும் என்பது அக்கட்சியின் மேலிட கணக்கு. எனவே கிருஷ்ணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாஜக பக்கம் வரச் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடக முதல்வர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மகாராஷ்டிரா ஆளுநர் ஆகிய பதவிகளை காங்கிரஸ் கட்சி கிருஷ்ணாவுக்கு வழங்கி அழகு பார்த்தது. ஆனால் கர்நாடக காங்கிரசில் முதல்வர் சித்தராமையாவின் ஆதிக்கம் ஓங்கியுள்ளதால் கிருஷ்ணா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். எனவே அதிருப்தியால் காங்கிரசிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Former Karnataka Chief Minister, SM Krishna will join BJP, asays BJP's state President BS Yeddyurappa.

முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா விரைவில் பாஜகவில் இணைவார் என்று அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

English summary
Former Karnataka Chief Minister, SM Krishna will join BJP, asays BJP’s state President BS Yeddyurappa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X