For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.பி.எப், பெண் குழந்தைகள் சேமிப்பு திட்ட பலனாளிகளே.. ஃபைனலி உங்களுக்கு ஒரு நல்ல சேதி

Google Oneindia Tamil News

டெல்லி: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி, மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி என்பது வரிசையாக குறைக்கப்பட்டு கொண்டே வந்த நிலையில் இப்போது வட்டி விகிதம் சற்று உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

Small savings schemes interest rate been hikes by Government

5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு தற்போது 8.3 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது, இது 8.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் இந்த வட்டி வழங்கப்படும்.

தொழிலாளர் சேமநல நிதி (பிபிஎஃப்) மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான ஆண்டு வட்டி விகிதம் என்பது தற்போதுள்ள 7.6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கிசான் விகாஸ் பத்திர வட்டி 7.3 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

பெண்குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி, அதாவது செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் 8.1 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

English summary
The government on Thursday hiked interest rates on small savings schemes, including National Savings Certificate (NSC) and Public Provident Fund (PPF), by up to 0.4 per cent for the October-December quarter, in line with rising deposit rates in the banks. Interest rates for small savings schemes are notified on a quarterly basis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X