For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட்டுப் போட்டாச்சு.. விவிபாட்டில் என்ன தெரியுது.. ஆ.. பாம்பு வருதே.. அலறிய வாக்காளர்கள்.. கேரளாவில்!

Google Oneindia Tamil News

கண்ணூர்: கேரளாவின் கண்ணூரில் உள்ள வாக்கு எந்திரத்துக்குள் சிறிய பாம்பு இருந்ததை கண்டு வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கேரளா மாநிலத்தில் இன்று மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கண்ணூர் மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், அந்த தொகுதியின் தற்போதைய எம்பியான பிகே ஸ்ரீமதி மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் சுரேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் சிகே பத்மாநாபன் போட்டியிடுகிறார்.

small Snake inside VVPAT machine holds up polling in Kannur

இன்று காலை முதல் கண்ணூர் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மயில் கொண்டகை என்ற வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட வந்த மக்கள் அங்கு பாம்பும் வந்திருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளிக்கலாம்... வீராணம் ஏரி நீரை 70% பயன்படுத்த திட்டம் சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளிக்கலாம்... வீராணம் ஏரி நீரை 70% பயன்படுத்த திட்டம்

விவிபிஏடி (வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரம்) இயந்திரத்தின் உள்ளே அந்த சிறிய பாம்பு இருந்துள்ளது. இதனை பார்த்த வாக்காளர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பாம்பை அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு அமைதியான முறையில் அங்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

மக்களவை தேர்தல் 3ம் கட்ட வாக்கப்பதிவு கேரளா உள்பட 14 மாநிலங்களில் 117 தொகுதிகளில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

English summary
lok sabha elections 2019 : small Snake inside VVPAT machine holds up polling in Kannur, kerala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X