For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் பல இடங்களில் திடீரென்று புழுதிப் புயல்.. மக்கள் அவதி

டெல்லியில் பல இடங்களில் திடீரென்று புழுதிப் புயல் வீசி வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பல இடங்களில் திடீரென்று புழுதிப் புயல் வீசி வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

டெல்லியில் அதிக அளவில் மாசு ஏற்பட்டு இருப்பதால் மக்கள் கடந்த சில வருடங்களாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். முக்கியமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவில் மாசு ஏற்பட்டு, கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு செல்கிறது. இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் டெல்லி அரசு திணறி வருகிறது.

Smoke Storm affects many parts of Delhi

இந்த நிலையில் தற்போது டெல்லியில் புழுதிப் புயல் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுக்க பல இடங்களில் மோசமாக புழுதிப்புயல் வீசி வருகிறது. புழுதிப் புயலால் டெல்லி வெப்பநிலை 33 டிகிரியில் இருந்து 22 டிகிரியாக குறைந்தது.

வெறும் 10 நிமிடத்தில் வெப்பநிலை மொத்தமாக குறைந்தது. இது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலுடன் சேர்த்து மழையும் பெய்வதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திடீரென்று வீசும் புயலுக்கு காரணம் தெரியாமல் வானிலை மையமும் குழம்பி இருக்கிறது. இதனால் அங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் எவ்வளவு நேரம் வீசும், என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

English summary
Worst Smoke Storm affects many parts of Delhi. It decreases Temperature from 33 degrees to 22 degrees. People are struggling due to this new storm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X