For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் “புகை விடும்” பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பாம் - மத்திய அரசின் திடுக் அறிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது என்று மத்திய அரசின் அறிக்கை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சிகரெட் நுகர்வு குறித்த தகவல் அறிக்கை ஒன்றினை லோக்சபாவில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "2014-15 ஆண்டுகளில் சுமார் 93.2 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனை வீழ்ச்சிதான்:

விற்பனை வீழ்ச்சிதான்:

இது 2012-13 ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டதை விட 10 பில்லியன் குறைவு. அதேபோல் சிகரெட் உற்பத்தி 117 பில்லியனில் இருந்து 105.3 பில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பெண்களிடம் ஜாஸ்தி:

பெண்களிடம் ஜாஸ்தி:

இது ஒரு புறம் இருக்க இந்தியாவில் சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் 187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஹப்பா அவ்ளோ பேரா?:

ஹப்பா அவ்ளோ பேரா?:

1980 ஆம் ஆண்டில் 53 லட்சமாக இருந்த சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2012-ல் 127 லட்சமாக அதாவது 1.27 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 32 ஆண்டுகளில் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.

அடிச்சு விடுங்கம்மா:

அடிச்சு விடுங்கம்மா:

2009-10 ஆண்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் 24 சதவீதம் ஆண்களும், 17 சதவீதம் பெண்களும் புகையில்லா குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
cigarette consumption in India is falling steadily even as the number of women smokers is rising, making it home to the second largest number of female smokers after the United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X