For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாய கடன் தள்ளுபடி குறித்து கேள்வி கேட்ட ஸ்மிருதி இரானி.. கோரஸாக பல்பு கொடுத்த பொதுமக்கள்

Google Oneindia Tamil News

போபால்: மத்தியப்பிரதேசத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பொதுமக்களிடம் பல்பு வாங்கிய சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி தான் செய்து வருகிறது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ், மக்களவை தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

Smriti Irani Asked to crowd Did You Receive Farm Loan Waiver.. what they said.!

இதனால் அம்மாநிலத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ராகுலை எதிர்த்து, பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தான் களம் இறக்கப்பட்டுள்ளார். 6ம் கட்டமாக வரும் 12ம் தேதி மத்திய பிரதேசத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது

தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு ஆணையமாக செயல்படுகிறது.. சிபிஎம் சரமாரி குற்றச்சாட்டு தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு ஆணையமாக செயல்படுகிறது.. சிபிஎம் சரமாரி குற்றச்சாட்டு

இந்நிலையில் மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து, சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள அசோக்நகரில் ஸ்மிருதி இரானி பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

அப்போது அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து ஸ்மிருதி இரானி ஒரு கேள்வி கேட்டார். ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தபடி, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதா என்றார். ராகுல் விமர்சிக்க ஏதுவாக கூட்டத்தினரை பார்த்து இரானி இந்த கேள்வியை கேட்டார்.

இதற்கு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆமாம் சொன்னபடி கடனை தள்ளுபடி பண்ணியிருக்காங்கன்னு கோரஸாக கத்த, மத்திய அமைச்சருக்கோ மிகவும் தர்மசங்கடமாக போய்விட்டது. காங்கிரஸ் மற்றும் ராகுலை சாடுவதற்கதாக கேள்வி கேட்க போய், இப்படி மூக்குடைப்படும்படி ஆகிருச்சேன்னு அவரது முகம் சட்டென்று மாறிவிட்டது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ட்விட்டரில் ஷேர் செய்துள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி, பாஜகவினரின் பொய்களை மக்கள் உணரத் தொடங்கி விட்டதாக சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Smriti Irani asked to crowd they had received farm loans waivers from the congress government as promised by rahul gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X