For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் முதல்வர் பதவிக்கு ஸ்மிருதி இரானி?.. ஆனால் தான் ரேஸில் இல்லை என்கிறார்!

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் பதவிக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பெயர் அடிபடுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் மாநிலத்தில் போராட்டத்துக்கிடையே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது பாஜக. ஆனால் வலிமையான ஒரு முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக இன்னமும் தடுமாறி வருகிறது.

குஜராத் முதல்வராக கேசுபாய் படேல், நரேந்திர மோடி போன்ற ஆளுமைகள் கோலோச்சினர். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் ஆனந்திபென் குஜராத் முதல்வராக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து விஜய ரூபானி முதல்வரானார்.

Smriti Irani leading in race to be next Gujarat Chief Minister?

ஆனந்தி பென்னும் விஜய ரூபானியும் மக்களை ஈர்க்கக் கூடிய, அரசியல் களத்தில் எதிரிகளுக்கு சவாலாக இருக்கக் கூடிய வலிமையான தலைவர்களாக இல்லை என்பதுதான் நிதர்சனம். இதனால்தான் ஆட்சியை தக்க வைத்த பாஜக இன்னமும் முதல்வர் யார் என்பது குறித்து தெரிவிக்காமல் இருக்கிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியே, குஜராத் முதல்வர் பதவிக்கு பொருத்தமான நபராக இருப்பார்; காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கையாளக் கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது என்கிற லாபியும் செயல்பட தொடங்கியுள்ளது. ஆனால் ஸ்மிருதி இரானியோ, தாம் குஜராத் முதல்வர் பதவிக்கான போட்டியிலேயே இல்லை என்கிறார்.

அதேபோல் மத்தியாமைச்சர் மண்டவியா பெயரும் குஜராத் முதல்வர் பவிக்கு அடிபடுகிறது. குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியின் பட்டேல் சமூகத்தைச் சேர்ந்தவர் மண்டவியா. இப்பகுதி மக்கள்தான் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். விவசாயிகளுக்கு நெருக்கமான தலைவர் என்பதால் பாஜக மீதான அதிருப்தியை குறைக்கும் நடவடிக்கையாக மண்டவியாவும் முன்னிறுத்தப்படுகிறார்.

English summary
In Gujarat, Information and Broadcasting Minister Smriti Irani is reportedly the probable frontrunner in the next Chief Minister Post race.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X