For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். ஆட்சியில் முடங்கிக் கிடந்த மனித வள அமைச்சகம்.... லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி சாடல்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் செயலம் முடங்கிக் கிடந்ததாக அமைச்சர் ஸ்மிருதி இரானி சாடியுள்ளார்.

மத்திய மனித வளத்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி பொறுப்பேற்றது முதல் பல்வேறு மூத்த அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் என்றே குற்றம்சாட்டப்படுகிறது.

Smriti Irani in Lok Sabha exposes UPA era rot in HRD

இந்நிலையில் இன்று லோக்சபாவில் முந்தைய காங்கிரஸ் அரசின் மனித வளத்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்து ஸ்மிருதி இரானி பேசியதாவது:

Smriti Irani in Lok Sabha exposes UPA era rot in HRD

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடைசி நாட்களில் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் மிக மோசமான செயல்பாடுகளைக் கொண்டிருந்தது... குறிப்பாக தமிழகம், கேரளா, ஒடிஷா, குஜராத், காஷ்மீர் என பல மாநிலங்களின் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் அவசரம் காட்டியது அப்போதைய அரசு.

Smriti Irani in Lok Sabha exposes UPA era rot in HRD

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதேபோல் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மே13-ந் தேதியன்று சாகரில் உள்ள ஹரிசிங் கெளர் பல்கலைக் கழக துணைவேந்தராக காஜ்பியே நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர் யோகிந்த அலாக் மத்திய மனித வள அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

காங்கிரஸ் அரசின் கடைசி சில மாதங்களாகவே மத்திய மனித வளத்துறை அமைச்சக செயலற்றே கிடந்தது. ஆந்திரா மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் பல்லம் ராஜூ ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

Smriti Irani in Lok Sabha exposes UPA era rot in HRD

அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதா இல்லையா என தெரியாத நிலையில் தலைமையற்ற நிலையில்தான் மனித வளத்துறை அமைச்சகம் இருந்து வந்தது.

இதன் பின்னர் ஹரிசிங் கெளர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட காஜ்பியே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பின்னர் இதுபோன்ற பாகுபாடு பார்க்கவில்லை நாங்கள்... கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருக்கும் புராபி ராய்க்கும் கூட நாங்கள் சிறப்பு செய்தோம்.

இவ்வாறு ஸ்மிருதி இரானி பேசினார்.

இது தொடர்பான முழு விவரமான செய்திக்கு

English summary
Union HRD Minister Smriti Irani made some interesting revealtions earlier today in the Lok Sabha on how appointments to key Universities were sought to be made during the last few days of the UPA government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X