For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதெப்படி சோனியாவை விமர்சிக்கலாம்? திருவனந்தபுரத்தில் ஸ்மிருதி இரானிக்கு கருப்புக் கொடி

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரசார் கருப்புக் கொடி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

லலித் மோடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என்பதை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் ஆகியோர் சுஷ்மாவை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Smriti Irani shown black flags in Kerala

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சோனியாவையும் ராகுலையும் அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திருவனந்தபுரத்துக்கு ஸ்மிருதி இரானி வருகை தந்தார்.

ஆனால் சோனியா, ராகுலை விமர்சித்த ஸ்மிருதி இரானியே! திரும்பிப் போ! என்ற முழக்கங்களுடன் கேரளா மாநில இளைஞர் காங்கிரசார் கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

இதனால் திருவனந்தபுரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Youth Congress activists on Saturday showed black flags to Union minister Smriti Irani when she arrived Thiruvananthapuram to attend a BJP programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X