For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீ கடிச்சா எனக்கு கடிக்க தெரியாதா?.. பாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் தன்னை கடித்த பாம்பை முதியவர் ஒருவர் மீண்டும் கடித்ததால் முதியவர் இறந்தார். அதே போல் பாம்பும் இறந்துவிட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வத் காலா பாரியா (60). இவர் நேற்று சோள கதிர்களை ஏற்றும் லாரியின் அருகே நின்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று இவரது கை மற்றும் முகத்தில் கடித்தது. இதனால் காலாவுக்கு பாம்பு மேல் ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாம்பை அலேக்காக பிடித்த காலா அந்த பாம்பை திருப்பி கடித்துள்ளார்.

மருத்துவமனை

மருத்துவமனை

கடும் ஆத்திரத்தில் கடித்ததால் அந்த பாம்பு இறந்துவிட்டது. காலாவை கடித்த பாம்பு அதிக விஷத்தன்மை வாய்ந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் காலாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பலி

பலி

அப்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். கடைசியில் பாம்பினுடைய விஷம் கடுமையாக ஏறியதால் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அவர் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி காலா உயிரிழந்தார்.

சிகிச்சை

சிகிச்சை

இதையடுத்து அஜன்வா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கையிலும், முகத்திலும் பாம்பு கடித்தபோதே அவர் மருத்துவமனைக்கு வந்திருந்தால் ஏதேனும் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சித்திருக்கலாம்.

உதாரணம்

உதாரணம்

ஆனால் பாம்பையும் அவர் கடித்ததால் அதிலும் கோபத்தில் கடித்ததால் விஷம் எளிதில் ரத்தத்துடன் கலந்து விட்டது. மிருகங்களிடம் கோபத்தை காட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு காலாதான் உதாரணம்.

English summary
A 60 years old man died after a snake bite in Gujarat. He also retaliated, it also died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X