For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளம்பெண் வேவு விவகாரம்: விசாரணைக்கு குஜராத் அரசு உத்தரவு

By Mathi
Google Oneindia Tamil News

அகமதாபாத்: இளம் பெண்ணை உளவு பார்த்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்த குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா,. தமது சாகிபுக்காக இளம்பெண் ஒருவரை வேவு பார்த்தார் என்பது தொடர்பான ஆடியோ உரையாடல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெண்ணை வேவு பார்க்க ஒட்டுமொத்த பாதுகாப்பு படையும் ஏன் பயன்படுத்தப்பட வேண்டும்? அமித் ஷா சொல்லுகிற சாகிபு யார்? இந்த விவகாரத்தில் முதல்வர் மோடிக்கான தொடர்பு என்ன? என்று பல கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த அகமதாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் 2 உறுப்பினர்கள் அடங்கிய விசாரணை ஆணையத்தை குஜராத் அரசு நியமித்துள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் நீதிபதி சுகன்யா பென் பட் மற்றும் மாநிலத்தின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சி.கபூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தருமாறு இந்த ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

English summary
The Narendra Modi-led Gujarat government on Monday appointed a two-member commission to probe into the allegations of snooping on a young woman, even as the Congress women’s wing requested President Pranab Mukherjee to order a judicial inquiry into the controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X