For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடுப்பில் தண்ணீர் குடம் தூக்கி சுமக்கும் இந்திய பெண்களுக்காக வந்துவிட்டது உருட்டும் குடம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: இந்தியாவில் பெண்கள் தண்ணீர் பிடிக்க மைல் கணக்கில் குடங்களை தலையிலும், இடுப்பிலும் தூக்கிக்கொண்டு அலைவதை கண்டு, ரோலிங் குடங்களை உருவாக்கி அவர்கள் பணியை எளிமைப்படுத்தியுள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர்.

Social activist, creat the water wheel

நியூயார்க்கை சேர்ந்த சின்தியா கோயேனிக் என்பவர்தான் அந்த சமூக ஆர்வலர். இந்தியாவில் பெண்கள் பல மைல்கள் கால் கடுக்க நடந்து சென்று நீர் சேகரிப்பது குறித்தும், அதற்காக நிறைகுடங்களுடன் அவர்கள் தலைகளிலும், இடுப்புகளிலும், குடங்களை சுமப்பத்தையும் அறிந்து வேதனையடைந்த அவர், ரோல் செய்யும் வகையிலான நீர் பிடிக்கும் குடங்களை உருவாக்கியுள்ளார்.

டயர் கொண்ட சூட்கேஸ்களை உருட்டிச் செல்வதை போல, இதையும் எளிதாக கைப்பிடி மூலம் உருட்டிச் செல்ல முடியும். தேவைப்படுவோருக்கு இதை சப்ளை செய்ய அவர் உறுதியாக இருக்கிறாராம். இதுபோன்ற புது முயற்சிகளை நாமும் பாராட்டலாமே.

English summary
Cynthia Koenig, a social activist from New York, creat the water wheel to help Indian rural women who walk miles to fetch water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X