For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி என்கவுண்ட்டர் வழக்கு: போலீஸ் அதிகாரி வன்சரா விடுவிப்பை எதிர்த்து சோராபுதீன் சகோதரர்கள் அப்பீல்

போலி என்கவுண்ட்டர் வழக்கில் போலீஸ் அதிகாரி வன்சரா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சோராபுதீன் சகோதரர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: சோராபுதீன் சேக் போலி என்கவுண்ட்டர் வழக்கில் போலீஸ் அதிகாரி வன்சரா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுகிறது.

2005-ல் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர் சோராபுதீன் சேக். இதற்கு சாட்சியாக இருந்த பிரஜாபதியும் 2006-ல் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமித்ஷா

அமித்ஷா

இந்த வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தவரும் தற்போதைய பாஜக தேசிய தலைவருமான அமித்ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வழக்கில் இருந்தே அமித்ஷா விடுவிக்கப்பட்டார்.

அதிகாரிகள் விடுவிப்பு

அதிகாரிகள் விடுவிப்பு

மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் கடந்த வாரம் போலீஸ் அதிகாரிகள் வன்சரா, தினேஷ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீது குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சோராபுதீன் சகோதரர்கள் அப்பீல்

சோராபுதீன் சகோதரர்கள் அப்பீல்

இதனிடையே போலீஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சோராபுதீன் சகோதரர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், சோராபுதீன் போலீசாரால் கடத்தப்பட்டதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அவரை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான சாட்சியாக பிரஜாபதியும் இருந்தார் என சுட்டிக்காட்டுள்ளது.

விசாரணை தேவி

விசாரணை தேவி

இந்த மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மனு மீதான விசாரணைக்கான தேதி குறிப்பிடப்படவில்லை.

English summary
Sohrabuddin Sheikh's brother has moved the Bombay High Court against a special CBI court's order discharging IPS officer (retd) D G Vanzara in the encounter case. The petition challenges the lower court's decision letting off former Gujarat ATS chief D G Vanzara and Rajasthan IPS officer Dinesh MN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X